Godavari News Banner USA
Game Over Others Banner USA
Fakir Other Banner USA

''இவர் கூட தான் டேட்டிங் போனேன்'' - பிரபல ஹீரோவின் மகள் ஓபன் டாக்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பாலிவுட் சினிமாவின் உச்ச நட்சத்திரமான  நடிகர் அமீர் கான் இந்திய சினிமாவிலே முக்கிய நடிகராக தென்படுகிறார். வித்தியாசமான கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து விசித்திரமான நடிப்பினை வெளிப்படுத்தி வரும் அமீர்கானுக்கு உலகம் முழுவதும் ஏராளமான ரசிகர்கள் இருக்கின்றனர்.

Aamir Khan's Daughter Ira Confirms She's Dating Musician Mishaal Kirpalani

தற்போது 53 வயதாகும் அமீர்கானுக்கு  1986 ஆம் ஆண்டு ரனா தத்தா என்பவரை திருமணம் செய்துகொண்டார்.  பின்னர் இவர்களுக்கு  ஜுனைத் என்ற மகனும், ஐரா என்ற மகளும் பிறந்தனர். பின்னர் 2002 ஆம் ஆண்டு மனைவி ரனா தத்தாவுடன் ஏற்பட்ட மனக்கசப்பின் காரணத்தால் அவரை விவாகரத்து செய்து பிரிந்துவிட்டார். பின்னர் 2005ம் ஆண்டு  கிரண் ராவ் என்பவரை இரண்டாவது திருமணம் செய்துகொண்டார். கிரண் ராவ் அமீர்கான் நடித்த லகான் படத்தில்  துணை இயக்குனராக பணியாற்றியது குறிப்பிடத்தக்கது. பின்னர் இவர்கள் இருவருக்கும் அசாத் ராவ் கான் என்ற மகன் பிறந்தார்.

முதல் மனைவியை பிரிந்தாலும் அமீர்கான் தனது மூன்று குழந்தைகளையும் பாரபட்சமின்றி பாசத்துடன் பார்த்துக்கொள்கிறார் நிலையில் மகள் ஐரா கானிடம் இன்ஸ்டாகிராமில் ரசிகர் ஒருவர் நீங்கள் யாரையாவது காதலிக்கிறீர்களா? என கேட்டுள்ளார். அதற்கு சட்டென்று பதிலளித்த ஐரா காதலனின் போட்டோவுடம் ஆம் என பதில் அளித்துள்ளார். மிஷால் கிருபளானி என்ற இசையமைப்பாளரான அந்த நபருடன் நெருக்கமாக உள்ள போட்டோக்களையும் இன்ஸ்டாக்ராமில் அதிகம் வெளியிட்டுள்ளார் ஐரா. இந்த செய்தி தற்போது பாலிவுட் சினிமாவில் ஹாட் செய்தியாக பேசப்பட்டு வருகிறது.