'மொழி', '8 தோட்டாக்கள்', 'அரிமா நம்பி' போன்ற படங்களில் தனது யதார்த்தமான நடிப்பால் கவனம் ஈர்த்தவர் எம்.எஸ்.பாஸ்கர். இவருக்கு ஐஸ்வர்யா பாஸ்கர், ஆதித்யா பாஸ்கர் என இரண்டு பிள்ளைகள்.

இதில் ஆதித்யா பாஸ்கர், விஜய் சேதுபதி - திரிஷா நடித்து பெரும் வரவேற்பை பெற்ற, 96 படத்தில் ராம் என்ற வேடத்தில் நடித்து அனைவரையும் கவர்ந்துள்ளார்.
தற்போது இவரது சகோதரி ஐஸ்வர்யாவிற்கும், அகுல் என்பவருக்கும் சென்னையில் நேற்று(13-06-2019) நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இந்த விழாவில் இளைய திலகம் பிரபு கலந்துகொண்டார்.
மேலும் எம்.எஸ்.பாஸ்கரின் நெருங்கிய நண்பர்கள் இந்த விழாவில் கலந்துகொண்டு மணமக்களுக்கு தங்கள் வாழ்த்துகளை தெரிவித்தனர். எங்களுக்கு கிடைத்த தகவலின் படி இவர்களது திருமணம் அடுத்த வருடம் சம்மரில் நடைபெறும் என்று கூறப்படுகிறது.