"சாரி அண்ணா.." - மேடையில் நடந்த தவறுக்காக மாஸ்டர் நடிகரிடம் மன்னிப்பு கேட்ட '96' நடிகை..!
முகப்பு > சினிமா செய்திகள்இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் படம் மாஸ்டர். இதில் விஜய் இணைந்து விஜய் சேதுபதி, மாளவிகா மோகன்னன், சாந்தனு, ரமேஷ் திலக் என பலர் நடிக்கின்றனர். இந்த படத்தில் விஜய் கல்லூரி பேராசிரியராக நடிக்கிறார். எனவே பல இளம் நடிகர்களும் இந்த படத்தில் இணைந்துள்ளனர்.

இந்நிலையில் அப்படத்தில் 96 படத்தின் நடிகை கௌரியும் நடிக்கிறார். சமீபத்தில் நடந்த மாஸ்டர் படத்தின் ஆடியோ லான்ச்சின் பொது அவர் பேசினார். அப்போது தவறுதலாக நடிகர் சாந்தனுவை 'மேம்' என்று கூறிவிட்டார்.
இந்நிலையில் நிகழ்ச்சி முடிந்து இன்று அவர் தனது இன்ஸ்ட்டாகிராம் பக்கத்தில் அது பற்றி "சாந்தனு அண்ணாவை மேம் என்று அழைப்பதற்கு 2 செகண்ட் முன்பு... மன்னிச்சுருங்க அண்ணா..." என்று கூறியுள்ளார்.
Tags : Shanthanu Baghyaraj, Gouri Kishan, Master, 96 Tamil