www.garudabazaar.com

செம்ம... செம! வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி நடிக்கும் படத்தின் அடுத்த அப்டேட் வந்தாச்சு!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தேசிய விருது பெற்ற இயக்குனர் வெற்றிமாறன் ‘அசுரன்’, 'பாவக்கதைகள்' படங்களைத் தொடர்ந்து நடிகர் சூரி, விஜய் சேதுபதியுடன் இணைந்து பணியாற்றும் படம் “விடுதலை”.

BREAKING Vetrimaaran’s VIDUTHALAI Sirumalai shooting update

இந்த படம் ஜெயமோகனின் துணைவன் சிறுகதையை அடிப்படையாக வைத்து உருவாகிறது. இந்தப்படத்தில் நடிகர் விஜய் சேதுபதி நக்சலைட்டாகவும், சூரி போலிசாகவும் நடிக்கிறார்கள். இந்தப்படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைக்கிறார்.

BREAKING Vetrimaaran’s VIDUTHALAI Sirumalai shooting update

வெற்றிமாறனின் ஆஸ்தான ஒளிப்பதிவாளர் வேல்ராஜ் ISC ஒளிப்பதிவு செய்கிறார். ஜாக்கி கலை இயக்குனராக பணியாற்றுகிறார். பீட்டர் ஹெய்ன் சண்டைக்காட்சி இயக்குனராக பணியாற்றுகிறார். இந்தப்படத்தை RS Infotainment சார்பில் எல்ரெட் குமார் தயாரித்து வருகிறார். இவர் ஏற்கனவே கோ, கவண் போன்ற படங்களை தயாரித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

BREAKING Vetrimaaran’s VIDUTHALAI Sirumalai shooting update

விடுதலை படத்தின் முக்கிய படப்பிடிப்புகள் சத்தியமங்கலம் சுற்றுவட்டாரப்பகுதிகளில் படமாக்கப்பட்டது.  இந்நிலையில் இந்த படத்தின் தற்போதைய படப்பிடிப்பு திண்டுக்கல் மாவட்டம் சிறுமலை பகுதிகளில் நடந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. செப்டம்பர் முதல் வாரம் முதல் தொடர்ச்சியாக இரண்டு வாரங்கள் சிறுமலை பகுதியில் படப்பிடிப்பு நடந்தது என தகவல்கள் தெரிவிக்கின்றன. 

BREAKING Vetrimaaran’s VIDUTHALAI Sirumalai shooting update

இந்நிலையில் சிறுமலை படப்பிடிப்பை படக்குழு நேற்று (19.09.2021) நிறைவு செய்து  சென்னை திரும்பியுள்ளது. மேலும் இன்னும் 30 நாட்கள் படப்பிடிப்பு பாக்கி உள்ளதாகவும், அந்த மீதி படப்பிடிப்பை அக்டோபரில் 15 நாட்களும், நவம்பர் மற்றும் டிசம்பரில் மீதமுள்ள எஞ்சிய படப்பிடிப்பை நடத்தி முடிக்க இயக்குனர் வெற்றிமாறன் திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

BREAKING Vetrimaaran’s VIDUTHALAI Sirumalai shooting update

விடுதலை படத்தை தொடர்ந்து நடிகர் சூர்யாவுடன் வாடிவாசல் படத்தில் வெற்றிமாறன் பணியாற்ற உள்ளார்.

BREAKING Vetrimaaran’s VIDUTHALAI Sirumalai shooting update

People looking for online information on Soori, Vetrimaaran will find this news story useful.