www.garudabazaar.com

அப்படி போடு!! இந்த மிரட்டலான சஸ்பென்ஸ் த்ரில்லர் படத்தோட அடுத்த பாகம் வருதா?

முகப்பு > சினிமா செய்திகள்

By |

8 தோட்டாக்களுக்கு பிறகு நடிகர் வெற்றி, மீண்டும் ஹீரோவாக களமிறங்கிய படம் 'ஜீவி'.

Director Gopinath again joining hands with Hero Vetri for Jiivi2

இந்த படத்தில் ஹீரோ வெற்றி, கடை ஒன்றில் பணியாளராக வேலை செய்வார். அவருக்கு ஏற்படும் காதல் தோல்வி, வாழ்வில் முன்னேற்றமில்லாமை போன்றவற்றால் அவருக்கு ஏற்படும் மன அழுத்தம் ஆகியவை முதற்பாதி கதையில் நகரும்.

ஒரு நாள் அவரும் அவர் நண்பர் கருணாகரனும் இணைந்து அவர்களது வீட்டின் உரிமையாளர் வீட்டில் இருந்து நகைகளை கொள்ளையடித்து அதனை மறைக்க முயல்வார்கள்.  அதனால் ஏற்படும் பின் விளைவுகளே இந்த படத்தின் மீதிக்கதை. இப்படி, அடுத்து என்ன நடக்கும் என்று சஸ்பென்ஸ் திரில்லருக்கு தேவையான திரைக்கதையால் ஜீவி திரைப்படம் நல்ல அங்கீகாரத்தை பெற்றிருந்தது.

Director Gopinath again joining hands with Hero Vetri for Jiivi2

இந்த படத்தை இயக்குநர் கோபிநாத் இயக்கியிருந்தார். இந்நிலையில் இந்த படத்தின் இரண்டாம் பாகம் உருவாகவிருப்பதாக நம்பத்தகுந்த தகவல்கள் கிடைத்துள்ளன. மேலும், இந்த திரைப்படத்தையும், முதல் பாகத்தை இயக்கிய கோபிநாத்தே இயக்கவிருப்பதாகவும் தெரியவந்துள்ளது. எனினும் இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Also Read: கலகலப்பு 2-க்கு அப்றம் இணையும் ‘ஜீவா - சிவா’.. டைட்டிலை பாருங்க.. தரமான சம்பவம் இருக்கு!

மேலும் செய்திகள்

Director Gopinath again joining hands with Hero Vetri for Jiivi2

People looking for online information on 8 Thottakkal, Jiivi, Vetri will find this news story useful.