'இம்சை அரசன் 23 ஆம் புலிகேசி', 'அறை எண் 305ல் கடவுள்', 'இரும்புக்கோட்டை முரட்டு சிங்கம்', 'ஒரு கன்னியும், மூன்று களவானியும்' போன்ற படங்களை இயக்கியதன் மூலம் கவனம் ஈர்த்தவர் சிம்பு தேவன்.

இயக்குநர் சிம்பு தேவன் இயக்கத்தில் இறுதியாக தளபதி விஜய் நடித்த ‘புலி’ திரைப்படம் வெளியானது. அதைத் தொடர்ந்து ‘கசடதபற’ எனும் திரைப்படத்தை சிம்பு தேவன் இயக்கவிருக்கிறார். இந்த படத்தை இயக்குநர் வெங்கட் பிரபுவின் பிளாக் டிக்கெட் கம்பெனி நிறுவனமும், ட்ரிடென்ட் ஆர்ட்ஸ் நிறுவனமும் இணைந்து தயாரிக்கிறது.
இந்த படத்தில் 6 ஹீரோக்கள், 6 ஹீரோயின்கள், 6 இசையமைப்பாளர்கள், 6 எடிட்டர்கள் பணிபுரியுள்ளனர். அதன்படி, இப்படத்தில் பணியாற்றவிருக்கும் ஒளிப்பதிவாளர்கள், எட்டிட்டர்கள் குறித்த அறிவிப்பு வெளியான நிலையில், தற்போது 6 இசையமைப்பாளர்கள் குறித்த அறிவிப்பினை பிரபல இயக்குநரும், இசையமைப்பாளருமான கங்கை அமரன் வெளியிட்டுள்ளார்.
இப்படத்திற்கு இசையமைப்பாளர்கள் யுவன் ஷங்கர் ராஜா, சந்தோஷ் நாராயணன், ஜிப்ரான், பிரேம்ஜி அமரன், ஷான் ரோல்டன், சாம் சி.எஸ் ஆகிய் 6 பேரும் இசையமைக்கவுள்ளனர். எனவே இது ஒரு ஆந்தாலஜி வகை திரைப்படம் என்கிற எண்ணம் தோன்றுகிறது. மேலும், இப்படத்தின் நடிகர், நடிகையர் குறித்த அறிவிப்புகளும் அடுத்தடுத்து வெளியாகும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
என் அன்புத்திருக் குழந்தைகள் இணந்து கலக்கும் சுத்தமான தமிழ்ப் படமான #கசடதபற திரைப்படத்தில் ஒன்றிணைந்து 6 இசையமைப்பாளர்களை அறிமுகப்படுத்துவதில் மகிழ்கிறேன் இந்தபடம் மிக வெற்றிபெறும் என்பதில் சந்தேகமே இல்லை #6mdsofkasadatabara #kasadatabara @vp_offl @chimbu_deven @blacktktcompany pic.twitter.com/5OmnVZmZdz
— gangaiamaren@me.com (@gangaiamaren) May 24, 2019