மருத்துவமனையில் இருக்கும் தொகுப்பாளரும் நடிகருமான லோகேஷிற்காக களமிறங்கிய விஜய் சேதுபதி
முகப்பு > சினிமா செய்திகள்தளபதி விஜய்யுடன் இணைந்து விஜய் சேதுபதி நடித்துள்ள 'மாஸ்டர்' திரைப்படம் வருகிற ஏப்ரல் மாதம் வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள இந்த படத்துக்கு அனிருத் இசையமைக்க, சத்யன் சூரியன் ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா வருகிற மார்ச் 15 ஆம் தேதி நடைபெறவிருக்கிறது.

இதனையடுத்து விஜய் சேதுபதி ஹிந்தியில் அமீர்கானுடன் இணைந்து 'லால் சிங் சத்தா' (Lal Singh Chaddha), 'லாபம்', தெலுங்கில் 'உப்பெனா', 'யாதும் ஊரே யாவரும் கேளீர்', 'துல்கர் தர்பார்', காத்து வாக்குல ரெண்டு காதல் என படு பிஸியாக படங்களில் நடித்து வருகிறார்.
இந்நிலையில் சமீபத்தில் 'நானும் ரௌடி தான்' உள்ளிட்ட படங்களில் நடித்தவரும் ஆதித்யா சேனலில் தொகுப்பாளராக இருந்தவருமான லோகேஷை மருத்துவமனையில் சந்தித்துள்ளார். மேலும் அவருக்கு விஜய் சேதுபதி பண உதவி செய்துள்ளாராம்.