யுவன் ஷங்கர் ராஜா எமோஷனலான தருணம் - ''நீங்க இல்லனா இது நிச்சயம் நடந்திருக்காது''
முகப்பு > சினிமா செய்திகள்இளையராஜாவின் இளைய மகனான யுவன் ஷங்கர் ராஜா 'அரவிந்தன்' திரைப்படம் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானார். இந்த படம் பிப்ரவரி 28 1997 ஆம் ஆண்டு வெளியானது. இதனையடுத்து இந்த படம் வெளியாகி இன்றுடன் 23 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது. அதாவது லிட்டில் மேஸ்ட்ரோ நமக்கு கிடைத்து 23 ஆண்டுகள் ஆகிறது.
யுவன் ஷங்கர் ராஜா தமிழ் சினிமாவில் கிட்டத்தட்ட அனைத்து ஜானர் படங்களுக்கும் இசையமைத்த பெருமை அவருக்கு உண்டு. அனைத்திலும் உச்சம் தொட்டவர் அவர். அவருக்கென்று வெறித்தனமான தனி ரசிகர் பட்டாளமே உண்டு. குறிப்பாக அவரது குரலுக்கு.
திரையுலகில் 23 ஆண்டுகளை நிறைவு செய்துள்ள யுவனுக்கு பிரபலங்கள் முதல் ரசிகர்கள் வரை அவரின் பெருமைகளை பதிவிட்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக யுவன் தனது ட்விட்டர் பக்கத்தில், உங்கள் அன்பும், ஆதரவும் இல்லையென்றால் இது நடந்திருக்காது. உங்கள் அன்பு என்னை சிறந்த உயரங்களை அடைய உத்வேகப்படுத்தியது. என் மனம் தற்போது அன்பால் நிறைந்துள்ளது என்று பதிவிட்டுள்ளார்.
யுவன் தற்போது தல அஜித்தின் வலிமை, சிம்புவின் மாநாடு, எஸ்.ஜே.சூர்யா - பிரியா பவானி ஷங்கர் இணைந்து நடிக்கும் பொம்மை, ரியோவின் பிளான் பண்ணி பண்ணனும் உள்ளிட்ட படங்களுக்கு இசையமைத்து வருகிறார். இந்த படங்களின் பாடல்கள் மீதான எதிர்பார்ப்பு உச்சத்தில் இருக்கிறது.
This wouldn't have happened if not for your love and encouragement all through these years, your love has only motivated me to go higher and I will. My heart is filled with love and gratitude. Alhamdhulillah #23yearsofYuvan #23YearsofYuvanism
— Raja yuvan (@thisisysr) February 28, 2020