சுந்தர்.சியின் அரண்மனை-3 : இப்படி ஒரு இடத்தில் ஷூட்டிங்கா..? மிரட்டலுக்கு ரெடியான படக்குழு.
முகப்பு > சினிமா செய்திகள்சுந்தர்.சியின் அரண்மனை-3 படத்தின் ஷூட்டிங் குறித்து பல முக்கியமான தகவல்கள் தெரியவந்துள்ளன.
![சுந்தர்.சி அரண்மனை-3 ஷூட்டிங் தகவல் | sundar.c arya raashi khanna's aranmanai-3 shooting details சுந்தர்.சி அரண்மனை-3 ஷூட்டிங் தகவல் | sundar.c arya raashi khanna's aranmanai-3 shooting details](https://tamil.behindwoods.com/tamil-movies-cinema-news-ta/images/3-sundarc-arya-raashi-khannas-aranmanai-3-shooting-details-news-1.jpg)
சுந்தர்.சி இயக்கத்தில் உருவான திரைப்படம் அரண்மனை. ஹன்சிகா, ஆண்ட்ரியா உள்ளிட்டோர் நடித்த இத்திரைப்படம் மிகப்பெரிய வெற்றிப் பெற்றது. இதையடுத்து சித்தார்த், திரிஷா நடிப்பில் அரண்மனை-2 உருவாக்கப்பட்டது. இத்திரைப்படமும் ரசிகர்களை கவர்ந்தது. இதை தொடர்ந்து தற்போது சுந்தர்.சி அரண்மனை படத்தின் மூன்றாம் பாகத்தை எடுப்பதில் இறங்கியுள்ளார். இதில் ஆர்யா, ராஷி கன்னா, ஆண்ட்ரியா, சாக்ஷி அகர்வால் உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.
இந்நிலையில் அரண்மனை-3 படத்தின் படப்பிடிப்பு குறித்து தகவல் தெரிய வந்துள்ளது. வழக்கமாக செட்டுகளில் படப்பிடிப்பை நடத்தும் சுந்தர்.சி, இந்த முறை குஜராத் அருகில் உள்ள ராஜ்கோட்டில் பிரமாண்ட அரண்மனையை தேர்ந்தெடுத்துள்ளார். இதன் புகைப்படம் தற்போது வெளியாகியுள்ளது. 25 நாட்களுக்கு இங்கு படப்பிடிப்பை நடத்த படக்குழு திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது. மேலும் சின்னத்திரை நடிகையும் சிவகார்த்திகேயனின் நம்ம வீட்டு பிள்ளை படத்தில் நடித்த மைனா நந்தினியும் இப்படத்தில் நடிப்பதாக தெரியவந்துள்ளது.
Near Rajkot pic.twitter.com/hdOhQrFevr
— manobala (@manobalam) February 26, 2020