டிக் டாக்கிலும் 'புதிய' உயரத்தை தொட்ட மாஸ்டர்... 'ரசிகர்கள்' கொண்டாட்டம்!
முகப்பு > சினிமா செய்திகள்லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் மாஸ்டர். இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் ரசிகர்களின் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் மிகவும் பிரமாண்டமாக நடைபெற்றது. அனிருத் இசையில் உருவாகியிருக்கும் மாஸ்டர் படத்தின் பாடல்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்று வருகிறது.

குறிப்பாக இப்படத்தில் இடம்பெற்று இருக்கும் வாத்தி கம்மிங் பாடல் அனைத்து தரப்பினரையும் வெகுவாக கவர்ந்திருக்கிறது. யூடியூபில் 'வாத்தி கம்மிங்' பாடல் தற்போது வரை 19 மில்லியன் பார்வையாளர்களை கடந்திருக்கின்றது. இந்நிலையில் டிக்டாக்கில் வாத்தி கம்மிங் பாடல் 100 மில்லியனை தாண்டி இருப்பதாக சோனி மியூசிக் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து சோனி மியூசிக் தனது ட்விட்டர் பக்கத்தில், ''டிக் டாக்கில் வாத்தி கம்மிங் 100 மில்லியன் பார்வைகளை தொட்டுள்ளது. உங்களுடைய வாத்தி ஸ்டெப்பை முயற்சி செய்து விட்டீர்களா? இல்லையென்றால் உடனே முயற்சித்து பாருங்கள்,'' என தெரிவித்துள்ளது. தற்போது தளபதி ரசிகர்கள் இதனை சமூக வலைதளங்களில் கொண்டாடி வருகின்றனர்.
1️⃣0️⃣0️⃣ MILLION for our #Master on @TikTok_IN ! 🔥
Have you tried your version of the #VaathiStepu yet? 🥳
Do it now ➡️ https://t.co/ovJeQy7olO#VaathiComing ➡️ https://t.co/6WTC8om8SU@actorvijay @anirudhofficial @Dir_Lokesh @Jagadishbliss @XBFilmCreators @Lalit_SevenScr pic.twitter.com/HTkqONIYAR
— Sony Music South (@SonyMusicSouth) March 25, 2020