டாப்ஸி உருக்கம் - ''அவங்க கதைய கேட்டு அழுதுட்டேன்''

முகப்பு > சினிமா செய்திகள்

By |

அஸ்வின் சரவணன் இயக்கத்தில் டாப்ஸி நடித்து கடந்த வருடம் வெளியான 'கேம் ஓவர்' திரைப்படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றது. அதனைத் தொடர்ந்து அவர் நடிப்பில் ஹிந்தியில் உருவாகியுள்ள 'தப்பட்' திரைப்படம் வருகிற பிப்ரவரி 28 ஆம் தேதி வெளியாகியுள்ளது.

Taapsee Pannu Compared her Thappad movie with Real life incident

இந்த படத்தின் டிரெய்லர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்த படத்தை அனுபவ் சுசிலா சின்ஹா இயக்கியுள்ளார். குடும்ப பெண்கள் படும் கஷ்டங்களை பற்றி இந்த படம் குறிப்பிடப்பட்டுள்ளதாம். இந்நிலையில் நடிகை டாப்ஸியின் ட்விட்டர் பதிவை குறிப்பிட்டு பத்திரிக்கையாளர் ஒருவர், பெண் ஒருவர் தன் கணவரால் அடித்து துன்புறுத்துவது பற்றி குறிப்பிட்டிருந்தார்.

இதற்கு பதிலளித்த டாப்ஸி, ''அவரது கதையை கேட்டு கண்ணீர் வந்தது. எத்தனை பேர் இப்படி நாள்தோறும் இந்த பிரச்சனையை அமைதியாக கடக்கிறோம். அவர் இனியும் அமைதியாக எடுத்துக்கொள்ளமாட்டார் என்று நம்புகிறேன்'' என்று குறிப்பிட்டுள்ளார்.

Entertainment sub editor