நடன இயக்குநராகவும் நடிகராகவும் மக்கள் மனதை கவர்ந்த பிரபு தேவா, விஜய்யின் 'போக்கிரி' படத்தின் மூலம் இயக்குநராக தமிழ் ரசிகர்களுக்கு பரீட்சையமானார்.

அதனைத் தொடர்ந்து தமிழில் வெற்றி பெற்ற 'போக்கிரி' படத்தை ஹிந்தியில் சல்மான் கான் நடிப்பில் ரீமேக் செய்தார். அந்த படம் ரசிகர்கள் மத்தியில் மிகப் பெரிய வரவேற்பை பெற்றது.
இந்நிலையில் சல்மான் கானும் பிரபு தேவாவும் மீண்டும் ஒரு படத்தில் இணையுவுள்ளனர். 'தபாங்' படத்தின் மூன்றாம் பாகமாக உருவாகும் இந்த படத்தின் படப்பிடிப்பு இன்று முதல் துவங்கவுள்ளது.
பிரபு தேவா நடிப்பில் 'பொன் மாணிக்கவேல்' படத்தின் டிரெய்லர் அண்மையில் வெளியாகியிருந்தது. இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக நிவேதா பெத்துராஜ் நடிக்க, ஏ.சி.முகில் இயக்குகிறார்.