இயக்குநர் விஜய் இயக்கத்தில் பிரபு தேவா, தமன்னா, ஆர்ஜே பாலாஜி, சோனு சூட் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான படம் 'தேவி'. காமெடி பேய் படமாக உருவாகியிருந்த இந்த படம் தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளில் வெளியானது.

தமன்னா இந்த படத்தில் ஒன்றும் அறியாத கிராமத்து பெண்ணாகவும், பேய் தன் உடலுக்குள் புகுந்த பின் பக்கா மாடர்ன் பெண்ணாகவும் அதகளம் புரிந்திருப்பார். சாஜித் - வாஜித் , விஷால் மிஷ்ரா, உள்ளிட்டோர் இந்த படத்துக்கு இசையமைத்திருந்தனர்.
இந்த படத்தில் இடம் பெற்ற சல்மார் என்ற பாடல் அதிரி புதிரி ஹிட்டடித்தது. இந்நிலையில் இந்த படத்தின் இரண்டாம் தற்போது உருவாகி வருகிறது. கிரேஸி மோகன் இந்த படத்துக்கு வசனம் எழுத விஜய் இந்த படத்தை இயக்கிவருகிறார்.
இந்நிலையில் எல்கேஜி வெற்றி குறித்து நடைபெற்ற பத்திரிக்கையாளர் சந்திப்பில் பேசிய தயாரிப்பாளர் ஐசரி கே. கணேஷ், தனது தயாரிப்பில் அடுத்த படமான 'தேவி 2' திரைப்படம் ஏப்ரல் 5 ஆம் தேதி வெளியாகவிருப்பதாக அறிவித்துள்ளார்.