குப்பத்து ராஜாவின் சென்சார் ரிசல்ட் இதோ..!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர்கள் ஜி.வி.பிரகாஷ், பார்த்திபன் இணைந்து நடித்துள்ள ‘குப்பத்து ராஜா’ திரைப்படத்திற்கு சென்சாரில் ‘யு/ஏ’ சான்றிதழ் கிடைத்துள்ளது.

G.V.Prakash's Kuppathu Raja censored and certified with U/A

எஸ் ஃபோக்கஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவாகியுள்ள ‘குப்பத்து ராஜா’ திரைப்படத்தை அறிமுக இயக்குநர் பாபா பாஸ்கர் இயக்கியுள்ளார். பூனம் பாஜ்வா, எம்.எஸ்.பாஸ்கர், யோகிபாபு உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்துள்ளனர்.

வடசென்னை பின்னணியில் உருவாகியுள்ள இப்படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது இப்படத்திற்கு சென்சாரில் ‘யு/ஏ’ சான்றிதழ்  கிடைத்துள்ளது.

ஒரு சமூகத்தின் குரலாக உருவாகியுள்ள இப்படத்தில், குறிப்பிட்ட பகுதியில் வசிக்கும் மக்களின் வாழ்வியல், அவர்கள் சந்திக்கும் பிரச்னைகள், அதற்கான போராட்டங்களை பற்றிய விஷயங்கள் இப்படத்தில் பேசப்பட்டிருப்பதாக நடிகர் ஜி.வி.பிரகாஷ் தெரிவித்துள்ளார்.

முற்றிலும் மாறுபட்ட கதாபாத்திரத்தில் ஜி.வி.பிரகாஷ் நடித்து, இசையமைத்துள்ள இப்படம் வரும் ஏப்ரல்.5ம் தேதி உலகம் முழுவதும் ரிலீசாகவுள்ளது.