ஐரா- பவானி, யமுனாவாக லேடி சூப்பர் ஸ்டார் மாறியது இப்படி தான்..!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடிப்பில் உருவாகியுள்ள ‘ஐரா’ திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ மேக்கிங் வீடியோ வெளியாகியுள்ளது.

Making video of Nayanthara's Airaa film has been released

இந்த ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு அஜித்-நயன்தாரா நடிப்பில் வெளியான ‘விஸ்வாசம்’ வசூல் மற்றும் விமர்சன ரீதியாக அமோக வரவேற்பை பெற்றது. அதைத் தொடர்ந்து நயன்தாரா நடிப்பில் உருவாகியுள்ள ‘ஐரா’ திரைப்படம் வரும் மார்ச்.28ம் தேதி வெளியாகவுள்ளது.

முதன்முறையாக நயன்தாரா இரட்டை வேடத்தில் நடிக்கும் ஐரா திரைப்படத்தை குறும்பட இயக்குநர் சர்ஜுன் இயக்கியுள்ளார். இந்த படத்தில் நயன்தாரா, கலையரசன், யோகிபாபு, ஜெயப்பிரகாஷ், லீலாவதி உள்பட பலர் நடித்துள்ளனர். கே.எஸ்.சுந்தரமூர்த்தி இசையில் வெளியான பாடல்கள் நல்ல வரவேற்பை பெற்றது.

இந்நிலையில், இப்படத்தின் ரிலீசையொட்டி, அதற்கான புரொமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக இப்படம் உருவான விதம் குறித்த வீடியோ வெளியாகியுள்ளது.

இப்படம் உருவான விதம் குறித்து இயக்குநர் சர்ஜுன் கூறுகையில், முற்றிலும் மாறுபட்ட கதாபாத்திரத்தில் நயன்தாரா நடித்துள்ளார். த்ரில்லர் காமெடி சீன்கள் படத்தின் கதைக்குள் எடுத்துச் செல்லும். இசை இந்த படத்திற்கு மிகப்பெரிய பலம் என இயக்குநர் சர்ஜுன் தெரிவித்துள்ளார்.

ஐரா- பவானி, யமுனாவாக லேடி சூப்பர் ஸ்டார் மாறியது இப்படி தான்..! வீடியோ