தளபதி 63- லேடி சூப்பர் ஸ்டார் பற்றிய முக்கிய அப்டேட்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தளபதி விஜய் நடிப்பில் உருவாகி வரும் ‘தளபதி 63’ திரைப்படத்தின் ஷூட்டிங்கில் நடிகை நயன்தாரா இணைந்துள்ளார்.

Lady Superstar Nayanthara has joined the sets of Vijay's Thalapathy 63

‘தெறி’, ‘மெர்சல்’ திரைப்படங்களை தொடர்ந்து மூன்றாவது முறையாக விஜய்-அட்லி கூட்டணியில் உருவாகி வரும் இப்படத்தை ஏ.ஜி.எஸ் எண்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் தயாரித்து வருகிறது.

ஆஸ்கர் நாயகன் ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கும் இப்படத்தில் கதிர், யோகிபாபு, டேனியல் பாலாஜி உள்ளிட்டோர் நடிக்கின்றனர். இப்படத்திற்கு ஜி.கே.விஷ்ணு ஒளிப்பதிவு செய்கிறார்.

மிகுந்த பொருட்செலவில் பிரம்மாண்டமாக செட் அமைக்கப்பட்டு உருவாகி வரும் ‘தளபதி 63’ திரைப்படத்தின் பாடல், சண்டை காட்சிகள் அடங்கிய முதற்கட்ட ஷூட்டிங் பணிகள் சமீபத்தில் நிறைவடைந்தன.

இந்நிலையில், லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா தளபதி 63 படத்தின் ஷூட்டிங் பணிகளை நேற்று (மார்ச்.11) துவக்கியுள்ளார். தொடர்ந்து ஒரு வாரத்திற்கு நடைபெறும் ஷூட்டிங்கில் நயன்தாராவின் காட்சிகள் படமாக்கப்படும் என கூறப்படுகிறது.

தீபாவளிக்கு திரைக்கு வரவிருக்கும் இப்படம் குறித்த கூடுதல் தகவல் விரைவில் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.