கமல்ஹாசனின் கட்சியில் இணைந்த பிரபல காமெடி நடிகை

முகப்பு > சினிமா செய்திகள்

By |

உலகநாயகன் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியில் பிரபல காமெடி நடிகை கோவை சரளா தன்னை இணைத்துக் கொண்டார்.

Kovai Sarala joined Kamal Haasan's Makkal Needhi Maiam party

தமிழ் சினிமாவில் ஆச்சி மனோரமாவிற்கு பிறகு காமெடியில் கலக்குபவர் நடிகை கோவை சரளா. காமெடி ரோலில் நடித்துக் கொண்டிருந்த கோவை சரளா, கமல்ஹாசன் நடித்த ‘சதி லீலாவதி’ திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்திருந்தார்.

மகளிர் தினத்தை முன்னிட்டு சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள கட்சி அலுவலகத்தில் மகளிர் தின விழா கொண்டாடப்பட்டது. அதில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் முன்னிலையில் நடிகை கோவை சரளா தன்னை கட்சியில் இணைந்துக் கொண்டார்.

நாடாளுமன்ற தேர்தலில் தனித்து போட்டியிடுவதாக கமல்ஹாசன் அறிவித்திருந்த நிலையில், தற்போது கட்சியில் இணைந்துள்ள கோவை சரளா கொங்கு மண்டல தொகுதியில் போட்டியிட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.