ரன்பீர் கபூர், ஆலியா பட், அமிதாப் பச்சன், நாகர்ஜூனா ஆகியோர் நடிப்பில் உருவாகி வரும் படம் பிரம்மஸ்திரா. இந்த படத்தை அயன் முகர்ஜி இயக்குகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு பணிகள் தற்போது நடைபெற்றுவருகிறது.

இந்த வருடத்தின் மிகுந்த எதிர்பார்ப்புக்குள்ளான படங்களில் ஒன்றாக இது கருதப்படுகிறது. இந்த படத்தின் லோகோ மிக பிரம்மாண்டமான முறையில் அஹமதாபாத்தில் நடைபெற்ற கும்ப மேளாவில் மிக பிரம்மாண்டமாக வானத்தில் பல்வேறு வண்ண ஒளிகளுடன் வெளியிடப்பட்டது.
இது காண்போரை பரவசத்திற்குள்ளாக்கியது. மூன்று பாகங்களாக உருவாகும் இந்த படத்தின் முதல் பாகம் வருகிற டிசம்பர் மாதம் கிறிஸ்துமஸை முன்னிட்டு வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தை கரண் ஜோகர், அபூர்வ மேத்தா, நமித் மல்ஹோத்ரா, ரன்பீர் கபூர் மற்றும் பாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோஸ் ஆகியோர் தயாரிக்கின்றனர்.
பிரம்மாண்டம் காட்டிய ரன்பீர் - ஆலியா - கும்பமேளாவில் மின்னிய 'பிரம்மாஸ்திரா' வீடியோ