ஹரிஷ் கல்யாணின் ‘இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்’ ஸ்னீக் பீக் வீடியோ இதோ..!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

‘பியார் பிரேமா காதல்’ திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து நடிகர் ஹரிஷ் கல்யாண் நடிப்பில் உருவாகியுள்ள ‘இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்’ திரைப்படத்தின் சில நிமிட காட்சிகள் கொண்ட வீடியோ வெளியாகியுள்ளது.

Harish Kalyan's 'Ispade Rajavum Idhay Raniyum' Sneak Peek video released

‘பிக் பாஸ்’ நிகழ்ச்சி மூலம் பிரபலமான நடிகர் ஹரிஷ் கல்யாண் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான ‘பியார் பிரேமா காதல்’ திரைப்படம் இளைஞர்களை வெகுவாக கவர்ந்தது. அதைத் தொடர்ந்து ஹரிஷ் கல்யாண் நடிக்கும் அடுத்தப் படமும் காதல் படமாக அமைந்துள்ளது.

இயக்குநர் ரஞ்சித் ஜெயக்கொடி இயக்கியுள்ள இப்படத்தில் ஹரிஷ் கல்யாணுக்கு ஜோடியாக ‘காளி’ படத்தில் நடித்த ஷில்பா மஞ்சுநாத் நடித்துள்ளார். இவர்களுடன், மாகாபா ஆனந்த், பாலசரவணன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

சாம் சி.எஸ் இசையில் சமீபத்தில் வெளியான இப்படத்தின் அனைத்து பாடல்களும் ரசிகர்களின் ப்ளே லிஸ்ட்டில் இடம்பிடித்தது. ரொமாண்டிக் திரைப்படமாக உருவாகியுள்ள இப்படத்தின் சில நிமிட காட்சிகள் கொண்ட ஸ்னீக் பீக் வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. இப்படம் வரும் மார்ச்.15ம் தேதி ரிலீசாகவுள்ளது.

ஹரிஷ் கல்யாணின் ‘இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்’ ஸ்னீக் பீக் வீடியோ இதோ..! வீடியோ