'சண்டாளி' - ஹரிஸ் கல்யாணின் 'இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்' படத்தின் வீடியோ பாடல் இதோ

முகப்பு > சினிமா செய்திகள்

By |

'பியார் பிரேமா காதல்' படத்துக்கு பிறகு ஹரிஸ் கல்யாண் நடித்திருக்கும் படம் 'இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்'. இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக ஷில்பா மஞ்சுநாத் நடித்துள்ளார். மாகபா ஆனந்த் முக்கியமான வேடத்தில் நடித்துள்ளார்.

Sandali song released from Actor Harish kalyan's Ispade Rajavum Idhaya Raniyum

இந்த படத்துக்கு சாம் சிஎஸ் இசையமைக்க, 'புரியாத புதிர்' இயக்குநர் ரஞ்சித் ஜெயக்கொடி எழுதி இயக்கியுள்ளார். கவின் ராஜ் இந்த படத்துக்கு ஒளிப்பதிவு செய்துள்ளார்.

இந்நிலையில் இந்த படத்திலிருந்து 'சண்டாளி' என்ற வீடியோ பாடல் வெளியாகியுள்ளது. இந்த பாடல் காதலியை பிரிந்து துடிக்கும் காதலனின் மன வலியை சொல்லும் பாடலாக அமைந்துள்ளது.

மேலும் இந்த பாடல் வரிகளை இயக்குநர் ரஞ்சித் ஜெயக்கொடி எழுத, பால் பிரகாஷ் என்பவர் இந்த பாடலை பாடியுள்ளார். இந்த படம்  வருகிற 15 ஆம் தேதி வெள்ளிக்கிழமை திரையரங்குகளில் வெளியாகவிருக்கிறது.

'சண்டாளி' - ஹரிஸ் கல்யாணின் 'இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்' படத்தின் வீடியோ பாடல் இதோ வீடியோ