எப்பவுமே சிரித்து கொண்டிருக்கும் செஃப் வெங்கடேஷ் பட் வாழ்க்கையில் இவ்ளோ சோகமா...?!
முகப்பு > சினிமா செய்திகள்விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் 'குக் வித் கோமாளி' நிகழ்ச்சி பற்றி தெரியாதவர்களே இருக்க முடியாது. வரவர பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு இணையான ரசிகர் பட்டாளம் இந்த நிகழ்ச்சிக்கும் உருவாகியுள்ளது. போட்டியாளர்களுக்கும் சரி, கோமாளிகளுக்கும் சரி தனித்தனியே ரசிகர் பட்டாளம் இருக்கிறது என்றே சொல்லலாம். போட்டியாளர்கள் கோமாளிகளை வைத்துக் கொண்டு சமைக்க படாதபாடு படும் காட்சிகள் ரசிகர்களை குலுங்கி, குலுங்கி சிரிக்க வைக்கிறது. இந்நிலையில் இந்த ஷோவிற்காக ரசிகர்கள் காத்திருந்து பார்க்கும் அளவிற்கு மிகப்பெரிய ரீச் அடைந்துள்ளது. இந்நிலையில் போட்டியாளர்கள் மற்றும் கோமாளிகளை தாண்டி இந்நிகழ்ச்சியை தாங்கிப் பிடிப்பவர்கள் சமையல் கலைஞர்களான செஃப் தாமு மற்றும் செஃப் வெங்கடேஷ் பட் அவர்கள் தான். இவர்கள் இருவருமே உலகமறிந்த சமையல் கலைஞர்கள் என்பது நம் அனைவருக்கும் தெரியும்.
இந்நிலையில் வெங்கடேஷ் பட் பற்றி பலருக்கும் தெரியாத உண்மைகளை அவர் கடந்த வார நிகழ்ச்சியில் கூறியுள்ளார். அவர் கூறும்போது "நான் நான்காவது, எட்டாவது, ஒன்பதாவது வகுப்புகளில் தோல்வியுற்றேன். இரண்டாவது முறை ஒன்பதாவது வகுப்பு தேர்வு எழுதும்போதும் தோல்வியுற்றேன். எனது முதல் நிகழ்ச்சி ஒளிபரப்பாகும் பொழுது எனது தாயார் மரணமடைந்தார். எனது வேலை மற்றும் திருமணம் எல்லாமே லைட்டாக தான் கிடைத்தது. என் வாழ்க்கையில் நான் சந்தித்தது ஒவ்வொன்றுமே மிகப்பெரிய தோல்விகள் தான். ஆனால் அவை எல்லாவற்றையும் நாம் எப்படி எதிர் கொள்கிறோம் என்பதில் தான் இருக்கிறது." என்று கூறியுள்ளார். இன்று அவர் Accord ஹோட்டல் நிறுவனத்தின் சிஇஓ என்பது நம் அனைவருக்கும் தெரியும். இப்படி வாழ்க்கையில் பல கஷ்டங்களை தாண்டியும் உழைத்தால் ஜெயிக்க முடியும் என்பதற்குச் வெங்கடேஷ் பட் ஒரு வாழும் முன்னுதாரணம்.
எப்பவுமே சிரித்து கொண்டிருக்கும் செஃப் வெங்கடேஷ் பட் வாழ்க்கையில் இவ்ளோ சோகமா...?! வீடியோ
மேலும் செய்திகள்
தொடர்புடைய இணைப்புகள்
- இந்த மாதிரி Diet ஆல் Kidney Failure வரும் ஆபத்து? Chef Venkatesh Bhat's Interview | Rewind
- DOSA கடைல இப்படிலாம் நடக்குமா..! REVEALED: Interesting Story Behind A DOSA Master! | Epic Challenge
- Roadside PANI PURI Leads To Cancer? - Chef Venkatesh Bhat's Shocking Reply
- Kamal's Eating Style & Rajini's Favorite Food | Chef Venkatesh Bhat Reveals Part 2 | MT 78