மார்வெல் ஸ்டூடியோஸ் தயாரிப்பில் வரும் ஏப்.26ம் தேதி முதல் உலக ரசிகர்களை வியக்க வைக்கும் வகையில் ‘அவெஞ்சர்ஸ் எண்ட்கேம்’ திரைப்படம் வெளியாகவுள்ளது.

கடந்த ஆண்டு வெளியான அவெஞ்சர்ஸ் இன்ஃபினிட்டி வார் திரைப்படம் பாதி கதையுடன் முடிந்து மார்வெல் ரசிகர்களை ஏமாற்றியது. அந்த படத்தின் வில்லனான தானோஸ் உலகின் பாதி மக்களை அழித்துவிட்ட நிலையில், ‘அவெஞ்சர்ஸ் எண்ட்கேம்’ திரைப்படம், அதன் தொடர்ச்சியாக சூப்பர் ஹீரோஸ் கூட்டணி எப்படி மீதமுள்ள மக்களை காப்பாற்றுகிறார்கள் என்பதை விறுவிறுப்பான கதைக்களத்துடன் கூறும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.
தற்போது இப்படத்தின் புதிய டிரைலர் வெளியிடப்பட்டுள்ளது. இந்த டிரைலரில் அவெஞ்சர்ஸ் இன்ஃபினிட்டி வார் திரைப்படத்தின் தொடர்ச்சியாக உருவாகியுள்ள இப்படத்தின் டிரைலரில் பல சஸ்பன்ஸ் காட்சிகள் இடம்பெற்றுள்ளன.
`அயர்ன்மேன்', `தார்', `கேப்டன் அமெரிக்கா', `ஸ்பைடர்-மேன்' எனப் பல சூப்பர் ஹீரோக்களின் கூட்டணியான 'அவெஞ்சர்ஸி'ன் கடைசி படம் இது என்பது குறிப்பிடத்தக்கது. சமீபத்தில் வெளியான ‘கேப்டன் மார்வல்’ திரைப்படத்தையும் சேர்த்து மொத்தம் 21 திரைப்பட்னக்கள் வெளியாகியுள்ள நிலையில், இறுதிப்படமாக வெளியாகவிருக்கும் ‘அவெஞ்சர்ஸ் எண்ட்கேம்’ திரைப்பட்ம மீது கூடுதல் எதிர்ப்பார்ப்பு நிலவுகிறது.
Whatever it takes. Watch the brand-new trailer for Marvel Studios’ #AvengersEndgame. In theaters April 26. pic.twitter.com/rqJKEI1WAY
— Marvel Studios (@MarvelStudios) March 14, 2019