பிரபல சீரியலில் இனி ராதிகாவுக்கு பதில் இவர்..! ரசிகர்கள் அதிர்ச்சி

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ‘சந்திரகுமாரி’ சீரியலில் நடிகை ராதிகாவுக்கு பதிலாக நடிகை விஜி சந்திரசேகர் நடிக்கவிருக்கிறார்.

Actress Viji Chandrasekar replaces Radikaa Sarathkumar in Chandrakumari serial

தமிழ் சினிமாவின் 80களில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை ராதிகா. ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜயகாந்த் என முன்னணி நட்சத்திரங்களுடன் ஜோடி சேர்ந்து நடித்த ராதிகா, சின்னத்திரையிலும் தனது முத்திரையை அழுத்தமாக பதித்தார்.

‘சித்தி’ என்ற சீரியல் மூலம் சின்னத்திரை மற்றும் இல்லத்தரசிகளை கட்டிப்போட்டு வைத்திருந்த ராதிகா, தொடர்ச்சியாக ‘அரசி’, ‘செல்லமே’, ‘அண்ணாமலை’, ‘வாணி ராணி’ உள்ளிட்ட மெகா சீரியல்களை தயாரித்து நடித்து வந்தார்.

சமீபத்தில் ‘வாணி ராணி’ சீரியல் நிறைவடைந்ததையடுத்து, சரித்திரகால கதையை ‘சந்திரகுமாரி’ என்ற தலைப்பில் புதிய சீரியலில் நடித்து வந்தார். தினசரி சன் டிவியில் இரவு 9.30 மணிக்கு ராதிகாவின் சீரியல்கள் ஒளிபரப்பாகி வந்த நிலையில், ‘சந்திரகுமாரி’ சீரியலின் நேரம் சமீபத்தில் மாற்றப்பட்டது.

இந்நிலையில், திடீரென சிறிய இடைவெளி எடுத்துள்ள ராதிகா, தனக்கு பதிலாக தனது கதாபாத்திரத்தில் பிரபல குணச்சித்திர நடிகை விஜி சந்திரசேகர் நடிப்பார் எனவும், தனக்கு அளித்து வந்த அன்பும், ஆதவரவையும் அவருக்கும் அளிக்க வேண்டும் என்று தனது ரசிகர்களின் ராதிகா ட்விட்டரில் கேட்டுக் கொண்டார்.

இதற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக நடிகை விஜி, தனது ட்வீட்டில், இந்த வாய்ப்பளித்த ராதிகா அக்காவிற்கு நன்றி. ‘அழகி’ சீரியலுக்கு பின் சன் டிவியில் இன்று மாலை 6.30 மணிக்கு ஒளிபரப்பாகவுள்ள ‘சந்திரகுமாரி’ சீரியலில் நடிக்கவிருப்பதாக விஜி தெரிவித்துள்ளார். இதுவரை ராதிகா அக்கா சுமந்த பாரத்தை அவர் திரும்பி வரும் வரையில் நான் சுமக்கவிருப்பதாகவும், ரசிகர்களின் அன்பும், ஆதரவும் வேண்டும் எனவும் விஜி தனது ட்வீட்டில் தெரிவித்துள்ளார்.