பப்ஜி மீதான தடை என்னானது ? எப்போதிலிருந்து பப்ஜி விளையாட முடியும்? புதிய அறிவிப்பு!

முகப்பு > செய்திகள் > தொழில்நுட்பம்

By Sangeetha | Mar 26, 2019 12:29 PM

மொபைல் போன் விளையாட்டு பிரியர்களை மகிழ்விக்கும் விதமாக பப்ஜி நிறுவனம் அறிவிப்பினை ஒன்று வெளியிட்டுள்ளது.

no time restrictions for play the pubg game in india

ஸ்மார்ட்போன் பயன்படுத்தாத இளைஞர்களே இல்லை எனும் அளவிற்கு இன்றைய இளைஞர்கள் மத்தியில் செல்போன் பயன்பாடு அதிகரித்துள்ளது. அதிலும் மொபைல் கேம் விளையாடும் இன்றைய இளைஞர்கள் மிக அதிக அளவில் காணப்படுகின்றனர். பப்ஜி எனும் மொபைல் விளையாட்டு கேம், இளசுகள் மற்றும் பள்ளி, கல்லூரி மாணவர்கள் மத்தியில் மிகப் பிரபலமானது.

பப்ஜி மொபைல் கேம் தொடர்ந்து விளையாடுவதால் பல்வேறு உடல்நல பாதிப்புகள் ஏற்படுவதாக பொதுவான குற்றச்சாட்டு எழுந்துக்கொண்டே இருக்கின்றன.  இந்தியாவில் பல்வேறு பகுதிகளில் பள்ளி, கல்லூரி மாணவர்கள்  பப்ஜி கேம் விளையாட நிர்வாகம் சார்பில் தடை விதிக்கப்பட்டது. குஜராத் மாநிலத்தில் பொது இடங்களில் பப்ஜி விளையாடிய சில இளைஞர்கள் மீது வழக்குப்பதிவும் செய்யப்பட்டது.

பல்வேறு இடங்களில் பப்ஜி மொபைல் கேம் விளையாடத் தடை விதிக்க வேண்டும் என்று கோரிக்கைகள் வலுத்தன. இதையடுத்து பப்ஜி கேம் விளையாட்டு நேரத்தை கட்டுப்படுத்த அந்நிறுவனம் முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியானது. இந்தியாவில் ஒருவர் ஒரு நாளில் ஆறு மணி நேரம் மட்டுமே பப்ஜி கேம் விளையாட அனுமதிக்கப்பட உள்ளதாக கூறப்பட்டது. அதனை உறுதிப்படுத்தும் வகையில் 2 மணி நேரத்திற்கு மேல் விளையாடிய சிலருக்கும் இது தொடர்பான எச்சரிக்கை அனுப்பப்பட்டது.

இந்நிலையில் இந்தச் செய்தி விளையாட்டிலிருந்த பிழை காரணமாகவே காட்டப்பட்டதாக பப்ஜி நிறுவனம் தெரிவித்திருக்கிறது.  இனிமேல் "நீங்கள் எந்தவிதத் தடையும் இல்லாமல் 24 மணி நேரமும் விளையாடலாம். சிரமத்துக்கு வருந்துகிறோம்" என ட்விட்டரில் பப்ஜி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : ##PUBG ##GAME ##MOBILE