தமிழகத்தில் நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் 61 சதவீத வாக்குகள் பதிவானது என மாநில தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது.
![Start of counting of votes in urban local elections Start of counting of votes in urban local elections](http://tamil.behindwoods.com/news-shots-tamil-news/images/tamilnadu/start-of-counting-of-votes-in-urban-local-elections.jpg)
தமிழ்நாட்டில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளுக்கான நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் கடந்த 19ஆம் தேதி நடைபெற்றது. 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள் மற்றும் 489 பேரூராட்சிகளுக்கு தேர்தல் நடத்தப்பட்டது.
இதற்காக மொத்தம் 31,150 வாக்குச்சாவடிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. மேலும், தேர்தலுக்காக 1 லட்சத்து 60 ஆயிரம் மின்னணு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டன.
வாக்குப்பதிவு முடிந்ததும் மின்னணு வாக்கு இயந்திரங்கள் அனைத்தும் பலத்த பாதுகாப்புடன் வாக்கு எண்ணும் மையங்களில் வைக்கப்பட்டுள்ளன. அங்கு துப்பாக்கி ஏந்திய போலீஸாருடன் 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சிசிடிவி கேமராக்கள் மூலம் 24 மணி நேரமும் கண்காணிக்கப்பட்டு வருகிறது
இந்நிலையில், இன்று(பிப்ரவரி 22) தமிழ்நாடு முழுவதும் 268 மையங்களில் காலை 8 மணி முதல் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றனர். அதைத் தொடர்ந்து வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்படும். சென்னையை பொறுத்தவரை சுமார் 15 இடங்களில் நடைபெறுகிறது. வாக்கு எண்ணும் பணியில் சுமார் 2 ஆயிரம் பேர் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.
வாக்கு எண்ணிக்கையின் போது எவ்வித அசம்பாவிதங்கள் நடைபெற கூடாது என்பதற்காக 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
வாக்கு எண்ணிக்கை முடிவுகள் வார்டு வாரியாக முழுமையாக எண்ணப்படும் அறிவிக்கப்படும்.காலை 10 மணி முதல் முடிவுகள் வெளியாக வாய்ப்புள்ளது. மாலைக்குள் வாக்கு எண்ணிக்கை நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், தேவையற்ற மோதல்களை தவிர்க்க, வாக்கு எண்ணும் மையங்கள் அமைந்துள்ள 268 இடங்களைச் சுற்றி 5 கி.மீ. சுற்றளவில் செயல்படும் அனைத்து டாஸ்மாக் மற்றும் பார்களை இன்று முழுவதும் மூட மாநில தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
தொடர்ந்து வருகிற 4-ந் தேதி மாநகராட்சி மேயர், நகராட்சி தலைவர்கள் மற்றும் பேரூராட்சி தலைவர்களை தேர்ந்தெடுப்பதற்கான மறைமுக தேர்தல் நடத்தப்படுகிறது. பொதுமக்கள் வாக்களித்து தேர்வு செய்துள்ள வார்டு உறுப்பினர்கள், இந்த பதவிகளுக்கான தலைவர்கள் மற்றும் துணை தலைவர்களை தேர்வு செய்வார்கள்.
![](https://www.behindwoods.com/images/spacer.gif)
மற்ற செய்திகள்
![](https://www.behindwoods.com/images/spacer.gif)