2 வேட்பாளருக்கும் ஒரே எண்ணிக்கையில் விழுந்த ஓட்டுகள்.. குலுக்கல் முறையில் திமுக வேட்பாளருக்கு கிடைத்த சர்ப்ரைஸ் வெற்றி..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்தமிழகத்தில் 1,374 மாநகராட்சி உறுப்பினர்கள், 3,843 நகராட்சி உறுப்பினர், 7,621 பேரூராட்சி உறுப்பினர் பதவிகள் என மொத்தமாக 12,838 பதவிகளுக்கு கடந்த 19 ஆம் தேதி தேர்தல் நடைபெற்றது.
"16 வயசுல.. இப்படி ஒரு சாதனை.. சான்ஸே இல்லை".. தமிழக சிறுவனை பாராட்டிய சச்சின்..!
தமிழக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் 61 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தன.முறைகேடு புகார் காரணமாக சென்னை உள்பட 4 மாவட்டங்களில் 7 வாக்குச்சாவடிகளில் நேற்று மறு வாக்குப்பதிவு நடந்தது. இன்று காலை 8 மணிக்கு ஓட்டு எண்ணிக்கை தொடங்கியது. தமிழகம் முழுவதும் 279 மையங்களில் ஓட்டு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது.
தபால் ஓட்டுகள்
வாக்கு எண்ணிக்கையின் முதற் கட்டமாக தபால் ஓட்டுகள் எண்ணப்பட்டன. தபால் ஓட்டுகளை பிரித்து யாருக்கு வாக்களிக்கப்பட்டுள்ளது என்பது அனைத்து முகவர்களுக்கும் தெரியும் வகையில் காண்பிக்கப்படும். இதன்பின்பு, யாருக்கு அந்த ஓட்டு பதிவாகி உள்ளதோ அவரது கணக்கில் அந்த வாக்கு சேர்க்கப்படும். இதன்பின்பு வாக்குப்பதிவு எந்திரங்கள் பாதுகாப்பு அறையில் இருந்து வாக்கு எண்ணும் மையத்துக்கு கொண்டுவரப்படும். பின்னர் கன்ட்ரோல் யூனிட்டில் இருக்கும் 'சீல்' வேட்பாளர்கள் முன்னிலையில் உடைக்கப்படும். இதைத்தொடர்ந்து கன்ட்ரோல் யூனிட்டில் சின்னம் வாரியாக பதிவான வாக்குகள் சேகரிக்கப்படும்.
ஊத்துக்கோட்டை
ஊத்துக்கோட்டையில் மொத்தமுள்ள 15 வார்டு உறுப்பினர் பதவிகளில் ஒருவர் (12 வது வார்டு) போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆகவே, மீதமுள்ள 14 வார்டுகளுக்கு தேர்தல் நடைபெற்றது. இந்நிலையில், இன்று டான் பாஸ்கோ பள்ளியில் வாக்கு எண்ணிக்கை நடைபெற்றுவருகிறது.
இதில் திமுக 12 இடங்களையும் அதிமுக 2 இடங்களையும் கைப்பற்றியுள்ளன.
சமநிலை
இந்நிலையில் 10 வது வார்டில் போட்டியிட்ட திமுகவின் ஆபிதாப் பேகம் மற்றும் சுயேச்சை வேட்பாளர் சாந்தி ஆகிய இருவரும் 154 வாக்குகள் பெற்று சமநிலை அடைந்தனர். பின்னர் தேர்தல் நடத்தும் அலுவலர் மாலா அவர்களால் சீட்டு குலுக்கி போட்டு குலுக்கல் முறையில் சீட்டுக் குலுக்கிப் போட்டு வெற்றியாளரை தேர்வு செய்ய முடிவு செய்தனர். இதனையடுத்து குலுக்கல் முறையில் திமுக வேட்பாளர் ஆப்தாப் பேகம் வெற்றிப் பெற்றதாக அறிவிக்கப்பட்டார்.
எஸ்பி வேலுமணியின் சொந்த தொகுதியை கைப்பற்றிய திமுக - செந்தில் பாலாஜியின் ஆப்பரேஷன் சக்ஸஸ்..!