இது ‘வேற லெவலாச்சே’.. வைரலாகும் தோனியின் புதிய புகைப்படம்.. உற்சாகத்தில் ரசிகர்கள்!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Siva Sankar | Feb 24, 2019 11:56 AM

விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனும் இந்திய  அணியின் தலயுமான தோனியின் சமீபத்திய புகைப்படம் ஒன்று வைரலாகி வருகிறது. இது வேற லெவல் தோனி என்று புகழாரமும் சூட்டி வருகின்றனர்.

Indian cricketer MS Dhoni New Photo goes viral on social media

கடந்த ஆண்டு இங்கிலாந்துக்கு எதிராக இந்தியா விளையாடிய போட்டியில் தோனியின் பேட்டிங் அவ்வளவு திருப்தியாக இல்லாததால் தோனியின் பெர்ஃபார்மென்ஸ் மீது விமர்சனங்கள் எழுந்தன.

பலரும் தோனியின் ஓய்வு பற்றி பேசத் தொடங்கினர். ஆனால் அப்போது கருத்து சொன்ன சச்சின் டெண்டுல்கர், ‘தோனியின் ஓய்வு குறித்து தோனிதான் முடிவெடுக்க வேண்டும். பேட்டிங், சீரான உடற்தகுதி உள்ளிட்ட பல்வேறு சவால்கள் வீரர்களின் கண் முன் நிறைந்திருக்கின்றன’ என்று கூறினார்.

சமீபத்தில் ஆஸ்திரேலியா மற்றும் நியூஸிலாந்து நாடுகளுக்கு இந்திய அணி சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாண்டு வந்தது. இதில் சிறப்பாக ஆடுபவர்கள் வரும் உலகக் கோப்பை போட்டியில் இடம் பெறுவார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தோனியும் இந்த ஆட்டங்களில் அதிரடியாக சேர்க்கப்பட்டார். மேலும் இந்த போட்டிகளில் தோனி தன்னை நிரூபிக்கும் விதமாக பேட்டிங்கிலும் அமோகமாக ஸ்கோர் செய்து மீண்டும் ஃபார்முக்கு வந்தார்.

இந்நிலையில் அடுத்து ஐபிஎல் சீசன் களைகட்டத் தொடங்கிவிட்டதால், தோனியின் தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ரசிகர்கள் தோனி இருப்பதாலேயே உற்சாகமடைந்துள்ளனர். இந்த நிலையில்தான், தல தோனி உடற்பயிற்சி செய்து முடித்த பின், பதிவிட்டுள்ள போட்டோ கிரிக்கெட் ரசிகர்களிடையே வைரலாகி வருகிறது.

Tags : #MSDHONI #CRICKET #VIRAL #PHOTO