'நாங்க ஜெய்க்குறதுக்கு இது ஒண்ணு போதும்'...பரபரப்பை கிளப்பியிருக்கும் ...பாஜக தலைவர்!
முகப்பு > செய்திகள் > தமிழ்By Jeno | Feb 28, 2019 02:08 PM
இந்திய விமானப்படை தாக்குதலால் நாடு முழுவதும் மோடியின் செல்வாக்கு உயர்ந்திருப்பதாக,கர்நாடக மாநில பாஜக தலைவர் எடியூரப்பா தெரிவித்துள்ளார்.இதன் மூலம் கர்நாடகாவில் பாரதிய ஜனதா அதிக இடங்களில் வெற்றி பெரும் என அவர் தெரிவித்திருக்கிறார்.அவரின் இந்த கருத்து கடும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.
புல்வாமாவில் கடந்த 14-ஆம் தேதி, நடத்தப்பட்ட தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாகிஸ்தானில் உள்ள பாலகோட் பகுதியில் இந்திய விமானப்படை அதிரடி தாக்குதலை நடத்தியது.இந்த தாக்குதலில் தீவிரவாதிகளின் முகாம்கள் அழிக்கபட்டதாக இந்திய தரப்பில் தெரிவிக்கப்பட்டது.இதனிடையே நேற்று காலை நமது எல்லைக்குக்குள் அத்துமீறிய பாகிஸ்தான் போர் விமானத்தை இந்திய ராணுவம் விரட்டியடித்தது.
இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த கர்நாடக மாநில பாஜக தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான எடியூரப்பா,“பாலகோட் பகுதியில் இந்திய விமானப்படை நடத்திய தாக்குதலால் பிரதமர் மோடியின் செல்வாக்கு அதிகரித்திருப்பதாக தெரிவித்துள்ளார்.இதனால் கர்நாடகாவில் மொத்தமுள்ள 28 தொகுதிகளில் 22 தொகுதிகள் பாஜகவுக்கு கிடைக்கும்” எனத் தெரிவித்தார்.
எடியூரப்பாவின் இந்த கருத்துக்கு காங்கிரஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.தாக்குதலை வைத்து எடியூரப்பா அரசியல் ஆதாயம் தேட பார்ப்பதாக குற்றம்சாட்டியுள்ளது.