"நாய்க்குட்டி-ன்னு நெனச்சு தான் இதை தூக்கிட்டு வந்தேன்".. 2 வருஷத்துக்கு அப்பறம் தெரியவந்த உண்மை..வனத்துறை அதிகாரிகளிடம் உதவி கேட்ட பெண்..!
முகப்பு > செய்திகள் > உலகம்சீனாவில் நாய்க்குட்டி என நினைத்து அரிய கரடியை இரண்டு வருடங்களாக வளர்த்து வந்திருக்கிறார் பெண் ஒருவர்.
Also Read | பசியுடன் சுற்றித்திரிந்த குரங்கு.. போலீஸ் அதிகாரி காட்டிய பாசம்.. நெகிழ வைக்கும் வீடியோ..!
சீனாவின் யுன்னான் மாகாணத்தில் உள்ள கிராமத்தை சேர்ந்தவர் ஸு யுன். இவர் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பாக சாலையில் நடந்து சென்றபோது கருப்பு நிறத்தில் நாய்க்குட்டி போல இருந்த விலங்கினத்தை பார்த்திருக்கிறார். நாய் என்றால் தனக்கு மிகவும் பிடிக்கும் எனக்கூறும் ஸு உடனடியாக அதனை தனது வீட்டிற்கு தூக்கிச் சென்றுள்ளார். அதனை அக்கறையோடு வளர்ந்துவந்த அந்த பெண்மணி, நாட்கள் செல்லச்செல்ல அதன் உருவம் வித்தியாசமாக வளர்ந்துவருவதை கண்டு அச்சமடைந்திருக்கிறார்.
நாய்க்குட்டி மீதான ஆசை
திபெத்தியன் மஸ்டிஃப் ரக நாய்க்குட்டி என நினைத்து அதனை வளர்த்து வந்ததாக கூறும் ஸு," தினந்தோறும் ஒரு பெட்டி பழங்கள் மற்றும் இரண்டு பாக்கெட்டுகள் நூடுல்ஸை அதற்கு அளித்து வந்தேன். எங்களது குடும்பத்தில் ஒரு ஆளாகவே அதனை கருதினோம். ஆனால் வளர வளர அதன் உருவம் வித்தியாசமாக இருந்ததை கண்டு நான் சந்தேகப்பட்டேன். அதனால் உள்ளூர் வனவிலங்கு அதிகாரிகளை வீட்டிற்கு அழைத்தேன்" என்றார்.
ஸு-வின் வீட்டிற்கு வந்த வனவிலங்கு நிபுணர்கள் அது ஒரு ஆசிய கருப்பு கரடி என்பதை கண்டுபிடித்திருக்கிறார்கள். இதனை உள்ளூர் மக்கள் மூன் கரடி என்றும் வெள்ளை மார்பு கரடி என்றும் அழைக்கிறார்கள்.
மருந்து
இந்த வகை கரடிகள் சீனாவில் கள்ள சந்தையில் அதிகளவு விற்பனை செய்யப்படுவதாக கூறிய நிபுணர்கள், "இந்த கரடியின் உடலில் இருந்து எடுக்கப்படும் ஒருவித மருந்து குடல் சார்ந்த நோய்களுக்கு சிகிசிச்சையளிக்க பயன்படுத்தப்படுகிறது. சீனாவில் இதற்கு சட்ட அனுமதி இருப்பதால் இந்த வகை கரடிகளை வளர்க்க பலரும் விருப்பப்படுகின்றனர். ஆனாலும் இவை காட்டு விலங்குகள் என்பதால் இதனால் மனிதர்களுக்கு பாதிப்பு ஏற்படலாம்" எனவும் அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
இதனை தொடர்ந்து ஸு-வின் கோரிக்கையை ஏற்று அவரது கரடியை அங்கிருந்து தூக்கிக் சென்றுள்ளனர் அதிகாரிகள். சீனாவில் நாய்க்குட்டி என கரடி குட்டியை பெண்மணி வளர்த்துவந்த சம்பவம் பலரையும் திகைக்க வைத்திருக்கிறது.