ஆழ்துளை கிணற்றில் விழுந்த சத்தீஸ்கர் சிறுவன்.. சுமார் 104 மணி நேரத்துக்கு பின் மீட்பு.!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Shiva Shankar | Jun 15, 2022 02:54 PM

சட்டீஸ்கர் மாநிலத்தின் ஜாங்கிர் சாம்பா மாவட்டத்தில் ஆழ்துளை கிணற்றில் விழுந்த சுமார் 10 வயது சிறுவன் 104  மணி நேரத்திற்கு பின்பு உயிருடன் மீட்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Chhattisgarh Boy, 11, Rescued From Borewell After 104 Hours

Also Read | "இறந்துபோன தம்பி.. ஃபோட்டோ முன்னாடிதான் தாலி கட்டுவேன்.." .. கலங்க வைத்த பாசம்.!!

ஆழ்துளை கிணற்றில் குழந்தைகள் விழுவது என்பது தொடர்கதையாகி வரும் நிலையில், சத்தீஸ்கர் மாநிலத்தை சேர்ந்த சிறுவன் ராகுல், தன்னை மீட்பதற்கான ஒத்துழைப்பை தந்தவண்ணம் இருந்தான்.  சிறுவன் ராகுல் மீண்டு வரவேண்டும் என பொதுமக்களும் பிரார்த்தனை செய்துவருகின்றனர்.

சுமார் 5 நாட்களாக, அதாவது தொடர்ச்சியாக 104 மணி நேரம், சிறுவன் ராகுலை ஆழ்துளை கிணற்றில் இருந்து மீட்கும் பணிகளை தேசிய பேரிடர் மீட்புப் படைக் குழுவினர் செய்ததுடன், அதில் வெற்றியும் கண்டிருக்கின்றனர். முன்னதாக சிறுவனை மீட்க பல்வேறு வழிமுறைகள் கையாளப்பட்டன.

Chhattisgarh Boy, 11, Rescued From Borewell After 104 Hours

பின்னர், ஆழ்துளை கிணற்றுக்கு அருகே, கிடைமட்ட சுரங்கம் அமைக்கும் பணிகளும் நடந்தன. கடந்த ஜூன் 10 ஆம் தேதி சுமார் 80 அடி ஆழமான ஆழ்துளை கிணற்றில் விழுந்த சிறுவன், மகோரடா டெவலப்மெண்ட் பிளாக்கில் உள்ள பிஹ்ரிட் கிராமத்தில் உள்ள தனது வீட்டின் பின்புறம் விளையாடி கொண்டிருந்துள்ளான். பின்னர் மதியம் 2 மணி அளவில் ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்து விட்டான்.

இந்நிலையில், 104  மணி நேரத்திற்கு பின்பு சிறுவன் உயிருடன் மீட்கப்பட்டதுடன், சிறுவனுக்கு மருத்துவ சிகிச்சைகள் வழங்கப்பட்டு வருகிறது. ஆழ்துளை கிணற்றில் இருந்தபடி வாளி மூலம் தண்ணீரை இரைத்து தந்தது உட்பட சிறுவன் கொஞ்சம் விழிப்போடு இருந்து தன்னை காப்பாற்றும் இந்த மீட்புப் பணிக்கு ஒத்துழைப்பு நல்கிய விதம் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது குறிப்பிடத்தக்கது.

Also Read | ஆழ்துளையில் 10 வயது சிறுவன்.. வாளியில் நீரை நிரப்பி அனுப்பும் ஆச்சர்யம்!.. 55 மணி நேர போராட்டம்..!

Tags : #CHHATTISGARH BOY #CHHATTISGARH 11 YR OLD BOY RESCUED #CHHATTISGARH BOY FELL IN BOREWELL #RAHUL SAHA

மற்ற செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Chhattisgarh Boy, 11, Rescued From Borewell After 104 Hours | India News.