தம்பிங்களா... நீங்க விளையாடினது போதும், கிளம்புங்க...! 'சும்மாவே வச்சு செய்வாரு...' இப்போ சொல்லியா கொடுக்கணும்...? ஈவு, இரக்கம் பார்க்காம கலாய்த்து தள்ளிய வாகன்...!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுடி-20 நேற்றைய தொடரில் நியூசிலாந்து அணியுடன் விளையாடிய இந்திய அணியை ரசிகர்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
உலகக்கோப்பை டி-20 கிரிக்கெட் தொடரின் சூப்பர் சுற்றுகள் நடைபெற்று கொண்டிருக்கும் நிலையில் இந்தியா தன்னுடைய முதல் போட்டியாக பாகிஸ்தான் அணியுடன் மோதி தோல்வி அடைந்தது.
இந்நிலையில் இரண்டாவது போட்டியாக நேற்று நியூசிலாந்து அணியும், இந்திய அணியும் மோதின. போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி கேப்டன் கேன் வில்லியம்சன் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார்.
முதலில் களத்தில் இறங்கிய இந்திய அணி நியூசிலாந்து அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் கடுமையாக தட்டு தடுமாறியது. இந்திய அணியின் முக்கிய பேட்ஸ்மேன்களான இஷான் கிஷன் (4), கே.எல் ராகுல் (18), ரோஹித் சர்மா (14) மற்றும் விராட் கோலி (9) என அனைவரும் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.
அதன்பின் வந்த ரிஷப் பண்ட் மற்றும் ஹர்திக் பாண்டியா என்ன தான் தாக்குப்பிடிக்க முயற்சித்தாலும் ரன்களில் எந்த முன்னேற்றமும் இல்லை. ரிஷப் பண்ட், ஹர்திக் பாண்டியா, ஜடேஜா ஒரு சிக்ஸர் ஆகியோரின் புண்ணியத்தில் 20 ஓவர்கள் முடிவில் இந்திய அணி வெறும் 110 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளது.
India could be on the way out of this #T20WorldCup .. the mindset & approach with all that talent so far has been so wrong #India
— Michael Vaughan (@MichaelVaughan) October 31, 2021
இந்தியாவின் நேற்றைய மோசமான ஆட்டத்தை முன்னாள் வீரர்கள், நெட்டிசன்கள் மட்டுமல்லாது இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் கூட கடுமையாக விமர்சித்து வருகின்றனர். அதிலும் குறிப்பாக முன்னாள் இங்கிலாந்து வீரரான மைக்கெல் வான், இந்தியா டி-20 தொடரில் வெற்றி பெற அல்ல விளையாட கூட தகுதி இல்லாத அணி எனக் கூறியுள்ளார்.
India are playing 2010 Cricket .. The game has moved on .. #T20WorldCup
— Michael Vaughan (@MichaelVaughan) October 31, 2021