9 தடுப்பூசிகள் 'சோதனை'யில இருக்கு... ஆனா அந்த லிஸ்ட்ல ரஷ்யா இல்ல... 'அதிர்ச்சி' கொடுக்கும் உலக சுகாதார நிறுவனம்!
முகப்பு > செய்திகள் > உலகம்உலகின் முதல் கொரோனா தடுப்பூசி என்ற பெருமையை பெறுவதற்கு ரஷ்யா தொடர்ந்து முயற்சித்து வருகிறது. எனினும் மனித பரிசோதனைகள் முடிவுக்கு வராமல் ரஷ்யா தடுப்பூசி தயாரிப்பதற்கு உலகம் முழுவதும் உள்ள விஞ்ஞானிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இது மட்டுமின்றி அமெரிக்கா, பிரிட்டன், ஜெர்மனி உள்ளிட்ட வல்லரசு நாடுகளும் இந்த தடுப்பூசி குறித்து சந்தேகம் எழுப்பி இருக்கின்றன. உச்சகட்டமாக ரஷ்யாவின் பிரபல மருத்துவர் இந்த தடுப்பூசி சட்டத்திற்கு புறம்பானது என தெரிவித்து தன்னுடைய பதவியை ராஜினாமா செய்து அதிர்ச்சி அளித்தார்.

இந்த நிலையில் உலக சுகாதார நிறுவனம் தன்னுடைய பங்குக்கு மேலும் ஒரு அதிர்ச்சி அளித்துள்ளது. இதுகுறித்து உலக சுகாதார நிறுவனத்தின் தலைமை இயக்குனர் டாக்டர் புரூஸ் அய்ல்வார்டு கூறுகையில், ''ரஷியாவின் தடுப்பூசி பற்றி முடிவு செய்வதற்கு எங்களிடம் (உலக சுகாதார நிறுவனத்திடம்) போதிய தகவல்கள் இல்லை. உலக சுகாதார நிறுவனத்தின் ஒருங்கிணைப்பில் மொத்தம் 9 தடுப்பூசிகள் இரண்டாவது அல்லது மூன்றாவது கட்ட சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளன. ஆனால் ரஷிய தடுப்பூசி அந்த 9 தடுப்பூசிகளில் ஒன்றாக இல்லை,'' என தெரிவித்து இருக்கிறார்.
இந்த விமர்சனங்களுக்கு ரஷ்யாவின் சுகாதார மந்திரி மிக்கேல் முராஷ்கோ பதில் அளித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், ''உலகின் முதல் கொரோனா தடுப்பூசி பற்றிய விமர்சனங்கள், பெரும்பாலும் சோதனைகள் பற்றிய தகவல்கள் இல்லாததால் வெளியானவை ஆகும். ஏற்கனவே 6 தடுப்பூசிகளுக்கு பயன்படுத்தப்பட்ட மேடையில்தான் எங்கள் தடுப்பூசி பற்றிய தகவல்கள் வெளியிடப்பட்டன என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று அல்ல.எங்கள் தடுப்பூசியின் மருத்துவ பரிசோதனைகள் தொடரும். வரும் நாட்களில், அநேகமாக திங்கட்கிழமையன்று எங்கள் தடுப்பூசியின் முன் மருத்துவ மற்றும் மருத்துவ பரிசோதனைகள் பற்றிய தகவல்கள் வெளியிடப்படும்,'' என தெரிவித்து உள்ளார்.

மற்ற செய்திகள்
