“தோனி கேப்டன்ஷியில் விளையாடுறது எல்லா ப்ளேயர்ஸோட கனவு”.. இளம் வீரர் ஓபன் டாக்..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுதோனி கேப்டன்ஷியின் கீழ் விளையாட ஆசை உள்ளதாக ரஷித் கான் தெரிவித்துள்ளார்.
ஐபிஎல் தொடரின் 15-வது சீசன் நாளை (26.03.2022) மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற உள்ளது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியும் மோதவுள்ளன. இதற்காக இரு அணி வீரர்களும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த ஆண்டு முதல் குஜராத், லக்னோ என்ற 2 புதிய அணிகள் இணைந்துள்ளன. லக்னோ அணிக்கு கே.எல்.ராகுல் கேப்டனாகவும், குஜராத் அணிக்கு ஹர்திக் பாண்டியா கேப்டனாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். இதில் குஜராத் அணியில் இடம்பெற்றுள்ள ஆப்கானிஸ்தான் சுழற்பந்து வீச்சாளர் ரஷித் கான், தோனியின் கேப்டன் கீழ் விளையாட விருப்பம் உள்ளதாக தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பேசிய அவர், ‘தோனியின் கேப்டன்சியின் கீழ் விளையாட ஒவ்வொரு வீரர்களும் ஆசைப்படுவார்கள். தற்போது குஜராத் அணிக்காக விளையாட ஒப்பந்தமாகி உள்ளதை நினைத்து நான் பெருமைப்படுகிறேன். அந்த அணிக்கு என்னால் முடிந்த அனைத்தையும் கொடுப்பேன். ஹர்திக் பாண்டியா தலைமையின் கீழ் விளையாடுவது வித்தியாசமான அனுபவமாக இருக்கும். முதல்முறையாக இப்போதுதான் ஒரு அணியை அவர் வழி நடத்துகிறார் என்பதால் போட்டியை எதிர்நோக்கி காத்துள்ளேன்’ என ரஷித் கான் தெரிவித்துள்ளார்.