'குறைகிறதா அமெரிக்க மோகம்?'... 'வரலாறு காணாத வீழ்ச்சி'... இதுதான் காரணமா?
முகப்பு > செய்திகள் > உலகம்அமெரிக்காவில் படிக்கும் இந்திய மாணவர்களின் எண்ணிக்கை 4.4 சதவீதம் குறைந்து உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

கொரோனா உலகையே ஆட்டம் காண வைத்துள்ள நிலையில் உலக அளவில் பொருளாதாரம் கடும் சரிவைச் சந்தித்துள்ளது. இந்த சூழ்நிலையில் அமெரிக்கக் கல்வி நிறுவனங்களில், வரலாறு காணாத அளவிற்கு வெளிநாட்டு மாணவர்களின் சேர்க்கை வெகுவாக சரிந்துள்ளது. இதுதொடர்பான ஆய்வறிக்கையில், அமெரிக்காவில் தங்கிப் படிப்பது அல்லது ஆன்லைன் வகுப்பிற்கான மாணவர் சேர்க்கை 42 சதவீதம் குறைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இந்தியாவிலிருந்து மட்டும் 4.4 சதவீதம் அளவிற்கு மாணவர் சேர்க்கை குறைந்துள்ளது. கொரோனாவால் விதிக்கப்பட்டுள்ள பயண கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டால், இந்த சரிவிலிருந்து மீள முடியும் என, சர்வதேச கல்வி நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அங்குள்ள கல்வி நிறுவனங்கள் மாணவர்கள் சேர்க்கையை ஒரு வருடத்திற்கு ஒத்திவைத்துள்ளதாக 90% நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

மற்ற செய்திகள்
