'சினிமாவில் மட்டுமல்ல நிஜத்திலும் இப்படி நடக்கலாம்'... 'நீ எனக்கு 2 வயசு குழந்தை டா, இப்போ உனக்கே குழந்தை இருக்கா'... நெகிழ்ந்து போன தாய்!

முகப்பு > செய்திகள் > உலகம்

By Jeno | Sep 19, 2020 01:42 PM

10 மாதம் சுமந்து பெற்ற குழந்தையை 38 வருடங்களுக்குப் பிறகுத் தாய் ஒருவர் சந்தித்த நிகழ்வு பலரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

Chinese elderly parents are reunited with their 40-year-old son

கடந்த 1982 ஆம் ஆண்டு மே மாதம் வடமேற்கு சீன பகுதியைச் சேர்ந்தவர் சு பிங்டே. இவர் வேலை நிமித்தமாக வெளியில் சென்றிருந்த நிலையில், அவரது மனைவி கணவர் வரும் வரை வீட்டைப் பூட்டாமல் இருந்துள்ளார். இரவு நேரம் ஆனதால் குழந்தைகளைத் தூங்க வைத்த விட்டு சு பிங்டேவின் மனைவியும் தூங்கச் சென்று விட்டார். காலையில் தூங்கி எழும்பிப் பார்த்த அவருக்கு பெரும் அதிர்ச்சி காத்திருந்தது. இரவில் தூங்க வைத்திருந்த மகனைக் காணவில்லை.

வீடு முழுவதும் தேடிப் பார்த்த நிலையிலும் அவன் கிடைக்கவில்லை. மிகவும் ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் அவர்கள் சிறிய வீட்டில் வசித்து வந்துள்ளார்கள். இதனால் வீட்டில் பெரிய அளவிற்கு எந்த விதமான பாதுகாப்பும் இல்லாமல் இருந்துள்ளது. இதைப் பயன்படுத்திய சிலர் 2 வயது மகனைக் கடத்தி சென்றுள்ளார்கள். காவல்துறையிடம் புகார் அளித்த நிலையில், பல நாட்கள் தேடியும் குழந்தையைக் கண்டுபிடிக்க முடியவில்லை.

Chinese elderly parents are reunited with their 40-year-old son

இதற்கிடையே 38 ஆண்டுகளுக்குப் பின்னர் சீன தேசிய டி.என்.ஏ மையத்தின் பரிசோதனை மூலம் 2 வயதில் காணாமல் போன ஜின் சுய் கண்டுபிடிக்கப்பட்டார். கண்டுபிடிக்கப்பட்ட ஜின் சுய்க்கு தற்போது திருமணமாகி 2 குழந்தைகளும் உள்ளனர். மகனை பார்த்த பெற்றோர் அவரை கட்டிப்பிடித்து அழுதார்கள். ஜின் சுய்யின் தாய் நீயே எனக்கு 2 வயதுக் குழந்தை தான் உனக்கு இப்போது 2 குழந்தைகளா என வெகுளியாகக் கேட்டார். 2 வயதில் காணாமல் போன மகனை 38 வருடங்களுக்குப் பிறகு பேரக்குழந்தைகளுடன் பெற்றோர் சந்தித்த நிகழ்வு சீனாவில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Chinese elderly parents are reunited with their 40-year-old son | World News.