இந்தியாவில் கொரோனா 'தடுப்பூசி' எப்போது பயன்பாட்டுக்கு வரும்?... சுகாதாரத்துறை விளக்கம்!
முகப்பு > செய்திகள் > இந்தியாமக்களை அச்சுறுத்தி முடக்கி வைத்திருக்கும் கொரோனா பெருந்தொற்று நோய்க்கு தடுப்பூசி கண்டுபிடிக்கும் பணியில் உலக நாடுகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. குறிப்பாக மக்கள் தொகையை அதிகம் கொண்டிருக்கும் நமது இந்தியாவில் கொரோனா தடுப்பூசி கண்டறியப்படும் என உலகம் முழுவதும் உள்ள பெருந்தலைவர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். உலக சுகாதார அமைப்பும் இந்தியா மீது மிகுந்த நம்பிக்கை கொண்டுள்ளது.

இந்த நிலையில் கொரோனா தடுப்பூசி குறித்து மாநிலங்களவையில் விவாதம் நடைபெற்றது. அப்போது மத்திய சுகாதாரத்துறை மந்திரியும், மருத்துவருமான ஹர்ஷவர்தன் அதற்கு பதிலளித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
கொரோனா பெருந்தொற்றை பிரதமர் மோடி மிகச்சரியாக கையாண்டார். ஒட்டுமொத்த நிலைமையையும் உன்னிப்பாகக் கண்காணித்தமைக்காக பிரதமர் நரேந்திர மோடி வரலாற்றில் இடம்பெறுவார். ஜனவரி 8-ம் தேதி முதல் பிரதமர், மத்திய மந்திரிகள் மற்றும் மாநில சுகாதார மந்திரிகள் நிலைமை குறித்து உரையாற்றி வருகின்றனர்.
பிரதமருடன் இணைந்து அனைத்து முதலமைச்சர்களும் கொரோனாவுக்கு எதிரான போரில் சிறப்பாக செயல்படுகின்றனர். மற்ற நாடுகளைப் போலவே இந்தியாவும் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. பிரதமரின் வழிகாட்டுதலின் கீழ், ஒரு நிபுணர் குழு கொரோனா நிலவரத்தை கண்காணித்துக் கொண்டிருக்கிறது. நம்மிடம் மேம்பட்ட திட்டமிடல் உள்ளது. அடுத்த ஆண்டு தொடக்கத்தில், இந்தியாவில் தடுப்பூசி கிடைக்கும் என்று நம்புகிறோம்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.

மற்ற செய்திகள்
