"இளம் வீரர்களுக்கு காட்பாதர்!".. "கொரோனாவ ஈஸியா எடுத்துக்கக் கூடாது என்பதற்கான செய்தி இது!".. கிரிக்கெட் உலகை சோகத்தில் ஆழ்த்திய 'மினி கவாஸ்கரின்' மரணம்!
முகப்பு > செய்திகள் > இந்தியாமுன்னாள் உள்ளூர் கிரிக்கெட் வீரர் சச்சின் தேஷ்முக் கோவிட் -19 காரணமாக செவ்வாய்க்கிழமை பிற்பகல் 2.57 மணிக்கு வேதாந்த் மருத்துவமனையில் இறந்ததால் மும்பை கிரிக்கெட் உலகமே பெரும் அதிர்ச்சியை சந்தித்தது. 52 வயதான அவர் மும்பை மற்றும் மகாராஷ்டிரா ரஞ்சி அணிகளின் அணிகளில் இடம் பிடித்தார், எனினும் லெவன் அணிகளில் இடம் பெறவில்லை.
சச்சின் தேஷ்முக் மும்பையில் கலால் மற்றும் சுங்க கண்காணிப்பாளராகவும் இருந்தார். வெற்றிகரமான ஜூனியர் கிரிக்கெட் வாழ்க்கையை கொண்டிருந்த, இவர் மேலும் அகில இந்திய இன்டர்-யுனிவர்சிட்டி போட்டியில் புனே பல்கலைக்கழகத்திற்காக தொடர்ச்சியாக விளையாடினார்.
"அவர் ஒரு திறமையான, திறமையான கிரிக்கெட் வீரர். மாதவ் மந்திரி அவரை மிகவும் விரும்புவதாக அவர் என்னிடம் சொல்லியிருந்தார். துரதிர்ஷ்டவசமாக, மும்பைக்கு விளையாடுவதற்கு அவருக்கு ஒருபோதும் வாய்ப்பு கிடைக்கவில்லை" என்று தேஷ்முகின் நெருங்கிய நண்பரும், மும்பை கிரிக்கெட் சங்கம் (எம்.சி.ஏ) முன்னாள் நிர்வாக குழு உறுப்பினருமான ரமேஷ் வாஜ் கூறியுள்ளார். மேலும் "அவரது மரணம் இந்த நோயை யாரும் இலகுவாக எடுத்துக் கொள்ளக் கூடாது என்பதற்கான செய்தி. அவருக்கு காய்ச்சல் இருந்தது, ஆனால் தன்னை மருத்துவமனையில் அனுமதிக்க மறுத்துவிட்டார். 9 நாட்களுக்கு முன்பு அவர் கோவிட் தொற்றுடன் கண்டறியப்பட்டார்," என்றும் ரமேஷ் வாஜ் கூறினார்.
"அவர் ஒரு அருமையான பேட்ஸ்மேன், உள்ளூர் கிரிக்கெட்டில் மினி கவாஸ்கர் என்று குறிப்பிடப்பட்டார்.” என்று முன்னாள் எம்.சி.ஏ நிர்வாக குழு உறுப்பினர் இக்பால் ஷேக் கூறியுள்ளார்.
"அவரது அகால மரணம் என்னை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. அவர் ஒரு சிறந்த மனிதர், அவர் நிறைய மும்பை கிரிக்கெட் வீரர்களுக்கு உதவினார். அவர் நகரத்தின் இளம் கிரிக்கெட் வீரர்களுக்கு ஒரு காட்பாதர் போல இருந்தார்" என்று எம்.சி.ஏ அப்பெக்ஸ் கவுன்சில் உறுப்பினர் நாடிம் மேமன் கூறினார்.