ரஷ்யாவிடம் இருந்து மீட்ட பகுதியில்.. "குவியல் குவியலா".. உக்ரைனில் காத்திருந்த அதிர்ச்சி!!.. உலகையே அதிர வைத்த பயங்கரம்!!
முகப்பு > செய்திகள் > உலகம்ரஷ்யா மற்றும் உக்ரைன் ஆகிய நாடுகளுக்கு இடையே கடந்த ஏழு மாதங்களாக தொடர்ந்து போர் நடைபெற்று வருகிறது.
உக்ரைனை கடுமையாக ரஷ்யா தாக்கி வரும் நிலையில், மறுபக்கம் உக்ரைனும் தொடர்ந்து பதில் தாக்குதலை நடத்தி வருகிறது.
இந்த போரில், கிழக்கு உக்ரைனிலுள்ள பெரும்பாலான பகுதிகளை தங்களின் கட்டுப்பாட்டில் வைத்திருந்தது ரஷ்ய ராணுவம். அதிலும் குறிப்பாக, ரஷ்ய மக்கள் அதிகம் வாழும் டொனட்ஸ்க் மாகாணத்தையும் தங்களின் முழு கட்டுப்பாட்டில் ரஷ்யா வைத்திருந்தது.
அப்படி ஒரு சூழ்நிலையில், டொனட்ஸ்க் மாகாணத்தில் அமைந்துள்ள இஸியம் என்னும் நகரை மீண்டும் தங்களின் வசம் கொண்டு வந்திருக்கிறது உக்ரைன் ராணுவம். இந்த நிலையில், ரஷ்ய படைகளிடம் இருந்த மீட்கப்பட்ட நகரான இஸியத்தில் கடும் அதிர்ச்சி ஒன்று, உக்ரைன் ராணுவ படையினருக்கு காத்திருந்துள்ளது.
இதற்கு காரணம், இஸியம் பகுதியில் சுமார் 440 க்கும் மேற்பட்ட உடல்கள் அடங்கிய புதைவிடம் ஒன்றை உக்ரைன் அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளது தான். இந்த சம்பவம் குறித்து உக்ரைனிய தலைமை காவல் புலனாய்வாளர் Serhiy Bolvinov கூறுகையில், "கண்டெடுக்கப்பட்ட ஒவ்வொரு உடலிலும் தடயவியல் ஆய்வு மேற்கொள்ளப்படும் என்றும், ரஷ்யாவிடம் இருந்து விடுவிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள மிகப் பெரிய சவ புதைக்குழிகளில் இதுவும் ஒன்று என என்னால் சொல்ல முடியும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், இந்த பகுதிகளில் கிடைத்த 440 உடல்களில் பலர் பீரங்கி தாக்குதல்கள் மூலம் இறந்ததாகவும், சிலர் வான்வழித் தாக்குதல்கள் மூலம் இறந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றது. இது தொடர்பான தெளிவான தகவல்கள் விரைவில் கிடைக்கும் என்றும் கருதப்படுகிறது.
ரஷ்யாவிடம் இருந்து மீட்கப்பட்ட இடத்தில் இத்தனை பேர் உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ள சம்பவம், உலக அளவில் கடும் அதிர்வலைகளை உண்டு பண்ணி உள்ளது.