"என் அப்பா வீட்டுக்கு வந்துட்டாரு" போர்க்களத்தில் இருந்து மகளை பார்க்க வந்த அப்பா.. கலங்கவைக்கும் வீடியோ..!
முகப்பு > செய்திகள் > உலகம்நீண்ட நாள் கழித்து தனது தந்தையை பார்த்து பூரிப்படையும் சிறுமி ஒருவரின் வீடியோ தற்போது சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

வீடு திரும்புதல் எப்போதும் மகிழ்வான விஷயம் தான். அதுவும் நெடுங்காலம் பிரிந்திருந்தவர்கள் ஒன்றிணைவது வாழ்வின் மிகச் சிறந்த தருணங்களுள் ஒன்று. அதனாலேயே நம் சங்க இலக்கியங்கள் பிரிவின் துயர் பற்றி அதிகம் பேசுகின்றன. குறிப்பாக தந்தையை பிரிந்து வாழும் குழந்தைகள் அவருக்காக ஏங்கி காத்திருப்பதும் அவர் வீடு திரும்பியவுடன் கால் தரையில் படாத அளவு சந்தோசம் கொள்வதும் வார்த்தைகளில் விவரிக்க முடியாத நிகழ்வு. அந்த வகையில் போர் வீரர் ஒருவர் வெகு நாட்கள் கழித்து, தனது மகளை சந்திக்கும் வீடியோ ஒன்று வெளியாகி சமூக வலை தளங்களில் பலரையும் கண்கலங்க வைத்திருக்கிறது.
வீட்டுக்கு திரும்பிய அப்பா
இந்த வீடியோவில் சிறுமி ஒருவரை கண்ணை பொத்தி வீட்டுக்குள் அழைத்து வருகிறார் ஒரு பெண்மணி. அப்போது, கையில் மலர்களுடன் சிறுமியின் தந்தை வீட்டுக்குள் காத்திருக்கிறார். தனது தந்தையை பார்த்ததும் ஓடிச்சென்று கட்டிக்கொள்ளும் அந்த சிறுமி கண்ணீர் மல்க அவரிடம் பேசுகிறார். மகளை வாரி அணைத்துக்கொண்ட அந்த போர்வீரரும் உணச்சிவசப்பட்டவராக சிறுமியின் கேள்விகளுக்கு பதில் சொல்கிறார். பார்த்த உடனே நம்மை கலங்க வைக்கும் இந்த வீடியோவை தற்போது பலரும் பகிர்ந்து வருகின்றனர்.
வீடியோ
இந்த வீடியோவை உக்ரைன் நாட்டின் உள்துறை விவகார அமைச்சகத்தின் ஆலோசகரான அன்டன் ஜெராஷ்செங்கோ தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார். அதில்," போர்க்களத்தில் இருந்து தந்தை வீட்டுக்கு திரும்பியுள்ளார்" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த பதிவில், "என்னை இந்த வீடியோ அழச் செய்துவிட்டது. தந்தை வீட்டுக்கு திரும்புவது எப்போதும் மிக மகிழ்ச்சியான தருணம்" என ஒருவர் கமெண்ட் செய்துள்ளார்.
மற்றொருவர் தனது வாழ்க்கையில் நடைபெற்ற சம்பவத்தை பகிர்ந்திருக்கிறார். அதில்," நான் அந்த சிறுமியின் அக உணச்சியை நன்கு அறிந்திருக்கிறேன். என்னுடைய தந்தை வியட்நாம் போரில் பங்கேற்றவர். அங்கிருந்து அவர் வீடு திரும்பும்போது அவருக்காக நானும் எனது சகோதரியும் காத்திருந்தோம். அப்போது கப்பலில் இருந்து எனது தந்தை இறங்கி வந்த காட்சி இன்னும் என் கண்முன்னே நிற்கிறது" என்று குறிப்பிட்டுள்ளார்.
Daddy came home from war - 2. pic.twitter.com/iOZORtnUSL
— Anton Gerashchenko (@Gerashchenko_en) July 9, 2022

மற்ற செய்திகள்
