'லாக்டவுன்ல வந்த பழக்கம்...' 'இன்னும் விட்டு போகல...' 'இந்த தடவ கேரட், கிரேப்ஸ் மிக்ஸ் பண்ணி...' - சென்னையில் பெண் செய்த காரியம்...!
முகப்பு > செய்திகள் > தமிழகம்திருவெற்றியூரில் சட்டத்திற்கு மாறாக திராட்சை கேரட் பீர் செய்த பெண்ணை போலீசார் கைது செய்துள்ளனர்.

சென்னை திருவெற்றியூர் குப்பம் அருகே ஜெ.ஜெ.நகர் பகுதியில் வீட்டிலேயே மதுபானங்கள் தயாரிப்பதாக புகார் எழுந்துள்ளது. அதன்படி திருவெற்றியூர் சட்டம்-ஒழுங்கு போலீசார் மேற்கொண்ட சோதனையில் ஒரு குடும்பத்தின் வீட்டில் திராட்சை கேரட் கலவையுடன் ஈஸ்ட் சேர்த்து குடங்களில் வைத்து பீர் தயாரித்து வந்தது தெரியவந்தது.
அந்த வீட்டை சேர்ந்த மேரி என்பவரை கைது செய்த போலீசார் காவல் நிலையம் அழைத்து வந்து மேற்கொண்ட விசாரணையில், கொரோனா பேரிடர் காலத்தில் மதுக்கடைகள் மூடப்பட்ட போது பீர் தயாரித்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் இதுவரை மேரி வீட்டில் தயாரித்து நான்கு முறை சிறை சென்று விட்டு வந்த நிலையிலும் தொடர்ந்து இதுபோன்று வீட்டில் மதுபானங்கள் தயாரித்து வந்ததை அடுத்து போலீசார் அவர் மீது வழக்குப்பதிவு செய்து புழல் சிறையில் அடைத்துள்ளனர்.

மற்ற செய்திகள்
