"இது எல்லாம் எங்களுக்கு செட் ஆகாது.." பிரபல நிறுவனத்தில் இருந்து.. 2 மாசத்துல கிளம்பிய 800 ஊழியர்கள்??
முகப்பு > செய்திகள் > இந்தியாகடந்த 2020 ஆம் ஆண்டு, உலகம் முழுவதும் கொரோனா தொற்று வேகமாக பரவி வந்த நிலையில், மக்கள் அனைவரும் வீட்டிலேயே முடங்கிக் கிடந்தனர்.
ஒரு பக்கம், கொரோனா தொற்றில் சிக்கி லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட, இன்னொரு பக்கம் வேலை, படிப்பு என அனைத்தையும் வீட்டில் இருந்த படி, இயக்கும் பழக்கமும் பல நாடுகளில் உருவானது.
இணைய வழியில் இந்த செயல்பாடுகள் அரங்கேறி வந்ததையடுத்து, கொரோனா தொற்று பல இடங்களில் குறைந்து வந்த பிறகும், வேலைக்கு செல்வோர் தொடர்ந்து வீட்டில் இருந்தே Work From Home நடைமுறை படி, பணிபுரிந்து வருகின்றனர்.
800 ஊழியர்கள் ராஜினாமா?
WFH முறை, நிறுவனத்துக்கும் ஊழியர்களுக்கும் பல வகையில் சாதகமாக இருப்பதால், அதனையே தொடர்ந்து நடைமுறைக்குள் ஆக்கி வருகிறது பல நிறுவனங்கள். இந்நிலையில், பிரபல நிறுவனம் ஒன்றில் இருந்து, சுமார் 800 ஊழியர்கள் கடந்த இரண்டு மாதங்களில் வேலையில் இருந்து ராஜினாமா செய்து விட்டு சென்றதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
கடந்த மார்ச் மாதம், தங்களுடைய ஊழியர்கள் அனைவரும் Work From Home-ஐ முடிவுக்கு கொண்டு வந்து விட்டு, அடுத்த ஒரு மாதத்திற்குள் மீண்டும் அலுவலகம் திரும்புமாறு அந்த பிரபல நிறுவனம், மெயில் ஒன்றை அனுப்பியதாக கூறப்படுகிறது.
இது நமக்கு செட் ஆகாது..
மீண்டும் அலுவலகம் திரும்ப வேண்டும் என்ற காரணத்தினால், சுமார் 800 ஊழியர்கள் கடந்த இரண்டு மாதங்களில் பேப்பர் போட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றது. முழுநேர ஊழியர்களான சேல்ஸ், கோடிங் உள்ளிட்ட அணிகளில் இருந்து, மீண்டும் அலுவலகம் வந்து வேலை செய்ய விருப்பம் இல்லாமல், இந்த முடிவினை ஊழியர்கள் எடுத்ததாகவும் சொல்லப்படுகிறது.
ஊழியர்கள் சொல்லும் காரணம்?
இதற்கான காரணம் என்ன என்பது பற்றி, அந்நிறுவனத்தில் ஊழியர்கள் சொன்ன தகவலும் தற்போது வெளியாகி உள்ளது. சுமார் இரண்டு ஆண்டுகள் வீடுகளில் இருந்து பணிபுரிந்து விட்டு, தற்போது மீண்டும் அலுவலகத்திற்கு வரும் பட்சத்தில், வீட்டு வாடகை, உணவு செலவு என பல விஷயங்கள் அதிகரிக்கும் என தெரிவித்துள்ளனர்.
அதே போல, அலுவலகத்திற்கு பயணம் மேற்கொள்ளும் நேரத்தில், வீட்டிலேயே இருந்து வேலை உற்பத்தியை அதிகரிக்கலாம் என்றும் சில ஊழியர்கள் குறிப்பிட்டுள்ளனர். இப்படி பல காரணங்களைக் குறிப்பிட்டு ஊழியர்கள், தங்களின் வேலையை ராஜினாமா செய்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா தொற்றின் காரணமாக, நிதி நெருக்கடி ஏற்பட்டு, பல முன்னணி நிறுவனங்கள் ஆயிரக்கணக்கான ஊழியர்களை பணி நீக்கம் செய்திருந்த நிலையில், மீண்டும் அலுவலகம் வர சொன்னதன் பெயரில், ஊழியர்களே பேப்பர் போட்டு ராஜினாமா செய்ய முன் வந்துள்ள தகவல், அதிகம் கருத்துக்களை உண்டு பண்ணி உள்ளது.
8 ஆவது Behindwoods Gold Medals விருதுகள் இந்த ஆண்டு சென்னை தீவுத்திடலில் உள்ள island மைதானத்தில் மே 15 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடக்க உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.
நிகழ்ச்சி டிக்கெட் முன் பதிவு செய்யும் லிங்க்.. https://behindwoods.com/bgm8