10 வயசுலயே குடும்பத்த பிரிஞ்ச 'சிறுவன்'.. பல மாசம் கழிச்சு நடந்த 'சம்பவம்'.. "பாக்குறப்போ கண்ணீரே வந்துடுச்சு"..

முகப்பு > செய்திகள் > உலகம்

By Ajith Kumar V | Oct 21, 2022 02:20 PM

சகோதரர்கள் இரண்டு பேர் பல மாதங்களுக்கு முன்பு பிரிந்த நிலையில், தற்போது சந்தித்துக் கொண்ட நிலையில், அவர்களுக்கு இடையேயான தருணங்கள் பலரையும் கண் கலங்க வைத்துள்ளது.

two afghan brothers who separated for months united in london

Also Read | "எப்படி பாஸ் சாத்தியம்?".. தக்காளி கூடைய வெச்சே மனுஷன் காட்டுன வித்தை.. Medical Miracle-ன்னு வியந்து பார்க்கும் நெட்டிசன்கள்!!

ஆப்கானிஸ்தான் நாட்டைச் சேர்ந்தவர்கள் Obaid. இந்த சிறுவனுக்கு தற்போது 10 வயது ஆவதாக தகவல்கள் தெரிவிக்கின்றது.

இவரும் இவரது சகோதரரும் கடந்த பல மாதங்களுக்கு முன்பாக ஆப்கானிஸ்தான் நாட்டில் பிரச்சனை உருவான போது அந்த நாட்டில் இருந்து வெளியேறி உள்ளனர். அந்த சமயத்தில், விமான நிலையத்தில் வைத்து Obaid மற்றும் அவரது சகோதரர் ஆகியோர் பிரிந்ததாக கூறப்படுகிறது. அப்படி விமானம் மூலம் பிரிந்த Obaid, நேராக பிரான்ஸ் நாட்டிற்கும் சென்றுள்ளதாக தெரிகிறது.

two afghan brothers who separated for months united in london

அங்கே உள்ள அகதிகள் முகாம் ஒன்றில் பல வயதான நபர்கள் மத்தியில் சிறுவனாகவும் Obaid வசித்து வந்துள்ளார். அதே வேளையில் தனது பெற்றோர்கள், குடும்பத்தினர்கள், உறவினர்கள் உள்ளிட்ட அனைவரையும் பிரிந்து கலக்கத்திலும் Obaid வாழ்ந்து வந்துள்ளார்.

மறுபக்கம், மகன் Obaid பிரிந்து சென்றதால் சோகத்தில் இருந்த அவரது குடும்பத்தினர், பல இடங்களில் தேடியும் வந்துள்ளனர். ஹுசைன் என்ற நபர், Obaid எங்கே இருக்கிறார் என்பதை கண்டுபிடிக்கவும் அவரது குடும்பத்தினரும் உதவி செய்துள்ளார். பல்வேறு கட்ட முயற்சிகளுக்கு பின்பு, Obaid பிரான்ஸில் இருப்பதை கண்டுபிடித்துள்ளார்.

two afghan brothers who separated for months united in london

இந்த நிலையில், பல மாதங்களுக்கு பிறகு தனது குடும்பத்தினரை லண்டன் பகுதியில் வைத்து நேரில் கண்டுள்ளார் Obaid. இதனைத் தொடர்ந்து, பல மாதங்கள் கழித்து தனது சகோதரரை நேரில் கண்ட Obaid, அவரைக் கட்டித் தழுவி ஆனந்தக் கண்ணீர் வடித்தது தொடர்பான வீடியோக்கள், பார்ப்போர் பலரையும் மனம் உடைய வைத்துள்ளது.

10 வயதில் தனது குடும்பத்தினரை இத்தனை மாதங்கள் பிரிந்து தற்போது கண்டு கொண்ட சிறுவனை நினைத்து பலரும் பல விதமான கருத்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.

 

Also Read | "நான் சனிக்கிழமை கெளம்பிடுவேன், இங்க இருக்குறது".. GP முத்து எடுத்த முடிவு.. வார இறுதியில் நடக்க போவது என்ன??

Tags : #LONDON #AFGHAN #BROTHERS #AFGHAN BROTHERS

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Two afghan brothers who separated for months united in london | World News.