அத 'மனசுல' வச்சுக்கிட்டு தான்... ஹெச்-1 பி விசாவை 'தடை' பண்ணிருக்காரு... 'வரிந்து' கட்டும் எதிர்க்கட்சிகள்!
முகப்பு > செய்திகள் > உலகம்அமெரிக்க மக்களுக்கு வேலை வாய்ப்பில் முன்னுரிமை அளிக்கும் வகையில் ஹெச்-1 பி, ஹெச்-2 பி, ஜே மற்றும் எல் ஆகிய அனைத்து வகையான விசாக்களையும் இந்த ஆண்டு இறுதி வரை நிறுத்தி வைப்பதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவித்து இருக்கிறார்.

இது இன்று (புதன்கிழமை) முதல் நடைமுறைக்கு வருகிறது. அவரின் இந்த தடை உலகம் முழுவதும் உள்ள மக்களுக்கு மிகப்பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. குறிப்பாக ஹெச்-1 பி விசாவை நிறுத்தி வைப்பதால் இந்திய ஊழியர்கள் கடுமையாக பாதிக்கப்படலாம் என தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.
இந்த நிலையில் நவம்பர் மாதம் நடக்க இருக்கும் ஜனாதிபதி தேர்தல் வெற்றிக்கு பயன்படும் வகையில் இந்த உத்தரவை டிரம்ப் பிறப்பித்துள்ளதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
கொரோனா விவகாரம் உள்ளிட்ட பல விஷயங்களிலும் அவர் எடுத்த நடவடிக்கைகள் அவருக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியிருக்கும் நிலையில் அமெரிக்க மக்களின் ஆதரவை அதிகரிக்க இந்த உத்தரவை அவர் பிறப்பித்ததாக எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்கின்றன.

மற்ற செய்திகள்
