பெரும் சோகம்.! அறுவை சிகிச்சை செய்த 5வது நாளில் அதிர்ச்சி.. EX அழகிக்கு பின்னர் நேர்ந்த துயரம்.. !

முகப்பு > செய்திகள் > உலகம்

By Ajith Kumar V | Jun 24, 2022 12:21 PM

பிரேசில் நாட்டைச் சேர்ந்த அழகிக்கு நேர்ந்த சம்பவம் ஒன்று, தற்போது பலரையும் அதிர்ச்சிக்குள் ஆக்கி உள்ளது.

former miss brazil gleycy correia passed away affter surgery reports

Also Read | "எனக்கு பெருமையா தான் இருக்கு.!".. தமது அங்கங்கள் குறித்து இணையத்தில் எழுந்த விமர்சனம்..! முன்னாள் இலங்கை எம்.பி அதிரடி பதில்..

பிரேசில் நாட்டைச் சேர்ந்தவர் கிளெய்சி கொரிய்யா. இவர் கடந்த 2018 ஆம் ஆண்டு, மிஸ் பிரேசில் பட்டம் வென்றவர் ஆவார். மேலும், தென்கிழக்கு நகரமான மெகேயில் நிரந்தர ஒப்பனை நிபுணராக பணியாற்றி வந்தார்.

இந்நிலையில், கடந்த ஏப்ரல் மாதத்தின் போது, டான்சில் பிரச்சனை ஏற்பட்டதன் காரணமாக, அறுவை சிகிச்சை செய்து கொண்டுள்ளார் கிளெய்சி கொரிய்யா.

அறுவை சிகிச்சையால் வந்த வினை?

இதனைத் தொடர்ந்து, அவர் அறுவை சிகிச்சை செய்து கொண்ட ஐந்து நாட்களில், திடீரென உடல்நிலை மோசமாகி போனதாக கூறப்படுகிகிறது. உடனடியாக, அவரை மீண்டும் மருத்துவமனையில் சேர்த்த நிலையில், கடந்த இரண்டு மாதங்களாக சிகிச்சை பெற்றும் வந்துள்ளார். இதனிடையே, அவரின் மூளையில் ரத்தக் கசிவும் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றது.

former miss brazil gleycy correia passed away affter surgery reports

சிகிச்சையின் போது ஏற்பட்ட மாரடைப்பு

மேலும், சிகிச்சையின் போதே கிளெய்சி கொரிய்யாவிற்கு மாரடைப்பும் ஏற்பட்டு, சுயநினைவை அவர் இழந்தும் போயுள்ளார். இதனைத் தொடர்ந்து, சுமார் இரண்டு மாதங்களாக சிகிச்சை அளித்த பிறகும், பலனளிக்காமல் உயிரிழந்து போயுள்ளார் கிளெய்சி கொரிய்யா. டான்சில் பிரச்சனை காரணமாக, அறுவை சிகிச்சை செய்து கொண்ட முன்னாள் பிரேசில் அழகி, ஐந்து நாட்களுக்கு பிறகு, உடல்நிலை மோசமாகி மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்த சம்பவம், கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

former miss brazil gleycy correia passed away affter surgery reports

மேலும் அவரது மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும், அறுவை சிகிச்சை மேற்கொண்ட மருத்துவமனையை விசாரிக்க வேண்டும் எனவும் கிளெய்சியின் குடும்பத்தினர்கள் கோரிக்கை வைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

கிளெய்சி கொரிய்யாவின் ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் பலரும், அவரது மறைவுக்கு இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர்.

Also Read | "இனிமே அப்பா தேவையில்ல.." திருநங்கையாக மாறிய எலான் மஸ்க் மகன்.. பரபரப்பை ஏற்படுத்திய பின்னணி..

Tags : #MISS BRAZIL GLEYCY CORREIA #MISS BRAZIL GLEYCY CORREIA PASSED AWAY #SURGERY REPORTS #கிளெய்சி கொரிய்யா

மற்ற செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Former miss brazil gleycy correia passed away affter surgery reports | World News.