'எனக்கே பயத்தை காட்டிட்டியே குமாரு'...'தெறிக்க விட்ட குட்டிச் சிங்கம் '...வைரலாகும் வீடியோ!

முகப்பு > செய்திகள் > உலகம்

By Jeno | Oct 10, 2019 04:50 PM

உயிரியல் பூங்காவில் தாய் சிங்கத்தை பின்பக்கமாக இருந்து பயம் காட்டும் குட்டிச் சிங்கத்தின் வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.

Tiny Lion Cub Gives Her Mother A Big Fright video goes viral

ஸ்காட்லாந்து நாட்டில் உள்ள எடின்பெர்க் உயிரியல் பூங்காவில் உள்ள சிங்கத்திற்கு 3 குட்டிகள் உள்ளன. அதில் 2 குட்டிகள் சிங்கத்தின் முன்பக்கம் விளையாடி கொண்டிருந்தன. மற்றோரு சிங்க குட்டி தாய் சிங்கத்தின் பின்புறம் படுத்திருந்தது. இந்நிலையில் பின்பக்கம் இருந்த சிங்கக்குட்டி சத்தமின்றி நடந்து வந்து தாய் சிங்கத்தின் அருகில் வந்ததும்  'வவ்'வென்று கத்தி பயம் காட்டியது.

இதில் ஒரு நிமிடம் அதிர்ச்சி அடைந்த தாய்ச் சிங்கம், கர்ஜனையுடன் திரும்பிப் பார்க்க, அது தனது குட்டி என்று தெரிந்ததும் அமைதி அடைந்தது. குட்டி சிங்கத்தின் சேட்டைகள் சிசிடிவி கேமராவில் பதிவாகி இருந்தது. அதனை தற்போது எடின்பெர்க் உயிரியல் பூங்கா நிர்வாகம் சமூக வலைதளங்களில் பதிவிட, அந்த வீடியோ லைக்ஸ்களை அள்ளி வருகிறது. மேலும் குட்டிச் சிங்கங்கள் பிறந்து 2 மாதங்கள் கூட ஆகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Tags : #TINY LION CUB #BIG FRIGHT #EDINBURGH ZOO #SCOTLAND