'செல்போனில் வந்த ஒரு மெசேஜ்...' என்னங்க சொல்றீங்க...! 'அவர் இறந்துப்போய் 10 வருஷம் ஆச்சுங்க...' - என்ன நடக்குது என புரியாமல் குழம்பி போன குடும்பம்...!
முகப்பு > செய்திகள் > இந்தியாஉயிரிழந்த நபரின் பெயர் எப்படி கொரோனா தடுப்பூசி எடுத்துக்கொண்டவர்களின் பட்டியலில் வந்தது என்பது குறித்து அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.

குஜராத் மாநிலத்தில் உயிரிழந்தவர் ஒருவர் தடுப்பூசி செலுத்திக்கொண்டதாக குடும்பத்தினருக்கு வந்த மெசேஜ் அனைவரிடமும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
குஜராத் மாநிலம் தகோத் மாவட்டத்தை சேர்ந்தவர் நரேஷ் தேசாய். கடந்த ஞாயிற்றுகிழமை இவரது மொபைல்போனுக்கு குறுஞ்செய்தி ஒன்று வந்துள்ளது. அதில் இவரது தந்தை நட்வர்லால் தேசாய் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டதாக வந்துள்ளது. இதனை கண்ட குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்துள்ளனர். நட்வர்லால் தேசாய் 2011-ம் ஆண்டு தனது 93 வயதில் மரணமடைந்துள்ளார். இறந்து 10 வருடம் ஆன நபர் தடுப்பூசி செலுத்திக்கொண்டதாக வந்த மேசேஜை சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் கவனத்துக்கு குடும்பத்தினர் கொண்டு சென்றுள்ளனர்.
இதுகுறித்து பேசியுள்ள தகோத் மாவட்ட ஆட்சியர், “ இதுதொடர்பாக விசாரணை மேற்கொண்டோம். நரேஷ் தேசாய் மகள் கடந்த சில தினங்களுக்கு முன்பு தடுப்பூசி எடுத்துக்கொண்டுள்ளார். அவரது பான் கார்ட் என்னும் 10 வருடங்களுக்கு முன்பு உயிரிழந்த அவரது தாத்தாவுடைய பான் எண்ணும் ஒன்றாக இருந்துள்ளது.என்றார்.
பேத்தியே தடுப்பூசி எடுத்துக்கொண்டாலும் உயிரிழந்த நபரின் பெயர் எப்படி கொரோனா தடுப்பூசி எடுத்துக்கொண்டவர்களின் பட்டியலில் வந்தது என்பது குறித்து அதிகாரிகள் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.
மேலும், அதேமாவட்டத்தை சேர்ந்த ஷர்மா என்பவருடைய மொபைல் போனுக்கு அவரது தாயார் தடுப்பூசி செலுத்திக்கொண்டதாக ஒரு மெசேஜ் வந்துள்ளது. ஷர்மாவின் தாயார் மது ஷர்மா மாரடைப்பு காரணமாக ஏப்ரல் மாதம் உயிரிழந்துள்ளார். இதுகுறித்து பேசிய அவரது மகன், நாள் அங்குள்ள ஆரம்ப சுகாதார மையத்தில் விசாரித்தேன் அவர்கள் தடுப்பூசி யாருக்கும் செலுத்தவில்லை என்று பதிலளித்தனர்” என்றார். ஷர்மாவுக்கு இவ்வாறான மெஜேச் எப்படி வந்தது என்பது குறித்து விசாரிக்கிறோம்” என அதிகாரிகள் கூறியுள்ளனர்.

மற்ற செய்திகள்
