"அவங்க கொஞ்சம் கூட மாறல"!.. தாலிபான்களிடம் இருந்து நூலிழையில் உயிர்தப்பிய... மருத்துவ மாணவர் போட்டுடைத்த பகீர் தகவல்!
முகப்பு > செய்திகள் > உலகம்காபூல் விமான நிலையத்திற்குள் நுழைய முயன்றபோது, 25 வயதான ஒரு இங்கிலாந்து மருத்துவ மாணவரை தாலிபான்கள் மிரட்டிய சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
இங்கிலாந்தைச் சேர்ந்த மருத்துவ மாணவர் ஒருவர் காபூல் விமான நிலையத்தில் தாலிபான்களால் மரண வேதனைப்படும் மக்களின் நிலைமை விவரித்துள்ளார்.
அவர் கூறியதாவது, "தாலிபான்கள் காபூல் விமான நிலையத்திற்குள் நுழைய முயன்ற மக்களை பயமுறுத்தும் வகையில், கண்டபடி காற்றில் துப்பாக்கிச்சூடு நடத்தினர். அவர்கள் அனைவரையும் மனிதர்கள் போல் அல்லாமல் ஆட்டு மந்தையைப் போல் நடத்துகின்றனர்.
அங்கிருக்கும் கூட்டத்தை நிர்வகிக்க முடியாத தாலிபான்கள் - பெண்கள், முதியவர்கள், குழந்தைகள் என அவர்கள் வழியில் யார் வந்தாலும் சாட்டையால் அடிப்பார்கள்.
தாலிபான்கள் கொஞ்சம் கூட மாறவில்லை என்று நான் நினைக்கிறேன். அவர்கள் அப்படியே தான் இருக்கிறார்கள்" என்று அவர் கூறியுள்ளார்.
அப்போது, தாலிபான் குழுவில் இருந்து ஒருவர், "நாங்கள் சர்வதேச சமூகத்தின் அழுத்தத்தில் இல்லை என்றால் உனது பாஸ்போர்ட் காரணமாகவே நாங்கள் உன்னை சுட்டுக் கொன்றிருப்போம்" என அச்சுறுத்தியதாக மாணவர் திடுக்கிடும் தகவலை தெரிவித்துள்ளார்.
அதைத் தொடர்ந்து, கிட்டத்தட்ட விமான நிலைய வாசலிலேயே 24 மணிநேர காத்திருப்புக்கு பின், ஒரு வழியாக அந்த மாணவர் ஆப்கானை விட்டு வெளியேறியதாகக் கூறினார்.
மேலும், "ஆப்கானிஸ்தானில் ஆட்சி அமைக்கவுள்ள தாலிபான்கள், மக்கள் மீது 1% கூட கருணை காட்டுவார்கள் என்ற நம்பிக்கை துளியும் எனக்கு இல்லை" என அவர் குறிப்பிட்டுள்ளார்.