ஏலத்துல விடப்படும் 'ஹிட்லரின் கைக் கடிகாரம்.? அப்படி என்ன ஸ்பெஷல்.! தீயாய் பரவும் வரலாற்று பின்னணி..

முகப்பு > செய்திகள் > உலகம்

By K Sivasankar | Jul 20, 2022 04:03 PM

ஹிட்லரின் இனிஷியல் கொண்ட கைக்கடிகாரம் ஏலத்தில் விடுவதற்காக சந்தைக்கு வந்திருப்பதாகவும், இதன் பணமதிப்பு மட்டும் இலங்கை பண மதிப்பு ரூபாயில், ரூபாய் 144 கோடி விலைக்கு போக இருப்பதாகவும் கூறப்படுகிறது.

Adolf Hitler Andreas Huber Watch to Be Sold at Auction

Also Read | Breaking: இலங்கையின் புதிய அதிபர் யார்.?.. தேர்தல் முடிவுகளை வெளியிட்டது நாடாளுமன்றம்..!

உலகின் மிக சக்திவாய்ந்த நாசி அமைப்பை கட்டமைத்தவர் அடால்ஃப் ஹிட்லர் என்கிற கருத்து பரவலாக இருக்கிறது. ஹிட்லருக்கு சொந்தமானதாக அண்மையில் ஒரு கைக்கடிகாரம் குறிப்பிடப்பட்டு வருகிறது. இதுகுறித்த உண்மை தன்மை தெரிய வராத நிலையில் இந்த கைக்கடிகாரம் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பொருட்களில் ஒன்றாக கூறப்படுகிறது. மிகப்பெரிய நிபுணர்களால் உருவானதாக சொல்லப்படும் இந்த கைக்கடிகாரம், அலெக்சாண்டர் ஹிஸ்டோரிகல் நிறுவனத்தால் ஏலத்தில் விற்கப்படுவதாக கூறப்படும் நிலையில் இதனுடைய விலை பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

அதன்படி, இந்த கடிகாரத்தின் விலை 2 முதல் 4 மில்லியன் அமெரிக்க டாலர் இருக்கலாம் என்று கூறப்படுகிறது. மேலும் இலங்கை பண மதிப்பில் ரூபாய் 144 கோடி வரை இந்த கை கடிகாரம் ஏலத்துக்கு விலை போகலாம் என்றும் சொல்லப்படுகிறது. இது எல்லாமே விற்பனைக்கு முந்தைய மதிப்பீட்டில் பேசப்படும் தொகை தான்.

Watchpro என்கிற நிறுவனம் ஹிட்லர் தமது 44வது பிறந்தநாளான ஏப்ரல் 20, 1933-ஆம் ஆண்டு தங்க தங்க ஆண்ட்ரியாஸ் ஹூபர் ரிவர்சிபிள் கைக்கடிகாரத்தை பெற்றதாகவும் அந்த கடிகாரத்தில் மூன்று தேதி இருந்ததாகவும் குறிப்பிட்டு இருக்கிறது. அதில் ஹிட்லரின் பிறந்த நாள், ஜெர்மனியின் அதிபராக அவர் நியமிக்கப்பட்ட நாள், 1933 ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் ஹிட்லரின் கட்சி கடைசியாக வெற்றி பெற்ற நாள் ஆகிய தேதிகள் குறிப்பிடப்பட்டதாக சொல்லப்படுகிறது. அந்த சமயத்தில் ஜெர்மனியின் அதிபராக ஹிட்லர் தேர்ந்தெடுக்கப்பட்டபோதுதான் அவருக்கு இந்த கைக்கடிகாரம் வழங்கப்பட்டதாகவும் சொல்லப்படுகிறது.

Adolf Hitler Andreas Huber Watch to Be Sold at Auction

அதன் பின்னர் 1945, மே 4-ஆம் தேதி, பவேரியா மலைப் பகுதியில் உள்ள பெர்ச்டெஸ்காடனில் ஹிட்லரின் பின்வாங்கலை அடைந்த முதல் நேச நாட்டு படையாக அவரது பட்டாலியன் படை மாறியது. அந்த நேரத்தில் ஒரு பிரெஞ்சு சிப்பாய் இந்த கை கடிகாரத்தை கண்டுபிடித்து எடுத்ததாகவும் கூறப்படுகிறது. இப்படியான வரலாறு இந்த வாட்சின் பின்னணியில் இருப்பதாகவும் ராணுவ வரலாற்று ஆசிரியர்கள் மற்றும் வாட்ச் தயாரிப்பாளர்கள் இந்த கடிகாரத்தின் பின்னணி குறித்து தெரிவித்திருக்கின்றனர்.

ஏலதாரரின் கூற்றுப்படி அடோப் ஹிட்லர் இதை சொந்தமாக வைத்திருந்தார் என்றும், இது சட்டபூர்வமானதுதான் என்றும் கருத்து வந்துள்ளதாக தெரிவித்திருக்கிறார்கள். எனினும் இந்த வாட்சின் தன்மை மற்றும் வரலாறு குறித்த அதிகாரப்பூர்வமான எந்த தகவலையும் சம்பந்தப்பட்ட  Jaeger-LeCoultre வாட்ச் நிறுவனம் இன்னும் அங்கீகரிக்கவோ அறிவிக்கவோ இல்லை என்று Watchpro தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Also Read | "ஒரு தடயமும் இல்லையே.." திருடனை பிடிக்க வழி தேடிய போலீஸ்.. "கடைசியா கொசு கொடுத்த 'Clue'

Tags : #ADOLF HITLER #ADOLF HITLER ANDREAS HUBER WATCH #ADOLF HITLER WATCH SOLD AT AUCTION

மற்ற செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Adolf Hitler Andreas Huber Watch to Be Sold at Auction | World News.