'பூமியின் அளவை விட பெரிதான கருப்பு புள்ளி'!.. 'சூரியனில் ஏற்பட்ட மாற்றத்தால்... வரப்போகும் ஆபத்து 'இது' தான்'!!.. விஞ்ஞானிகள் அதிர்ச்சி தகவல்!
முகப்பு > செய்திகள் > உலகம்சூரியனில் பூமியை விட பெரிதான கருப்பு புள்ளி ஒன்று உருவாகி உள்ளதை ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

இது குறித்து சார்ஜா விண்வெளி ஆராய்ச்சி கண்காணிப்பு மையத்தின் உதவி ஆராய்ச்சியாளர் முகம்மது தலபா பேசுகையில், சூரியனின் மேற்பரப்பில் மற்ற இடங்களைக் காட்டிலும் ஓரிடத்தில் வெப்பம் குறைவாக இருந்தால் அந்த இடம் கரும் புள்ளியாக தெரிகிறது என்றார்.
தற்போது பூமியை விட பெரிய அளவிலான கருப்பு புள்ளியை விஞ்ஞானிகள் கண்டுபிடித்து உள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
சைக்கிள் 25 என பெயரிடப்பட்டுள்ள இந்த சூரிய புள்ளிகளால் வருகிற 2022-ம் ஆண்டில் பூமியில் சில விளைவுகளை ஏற்படும் என்றும், பூமியின் சுற்றுவட்டப்பாதையில் உள்ள செயற்கைக்கோள்கள் கருப்பு புள்ளியால் ஏற்படும் சூரிய புயலால் சேதமடையக் கூடும் என்றும் அவர் தெரிவித்தார்.

மற்ற செய்திகள்
