'ரஷ்யாவின் தடுப்பு மருந்துக்கு பின்னால் 'இப்படி' ஒரு ஆபத்தா!?'.. 'இதுக்கு மருந்தே பயன்படுத்தாம இருப்பது நல்லது'!.. எச்சரிக்கும் விஞ்ஞானிகள்!
முகப்பு > செய்திகள் > உலகம்'அனைத்து கட்ட பரிசோதனைகளையும் நிறைவு செய்யாத ரஷ்யாவின் கொரோனா தடுப்பு மருந்து, வைரஸின் வீரியத்தை அதிகரிக்கச் செய்யும்' என்று விஞ்ஞானிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.
கொரோனா வைரஸுக்கு எதிரான முதல் தடுப்பு மருந்தை, பொதுமக்கள் பயன்பாட்டுக்கு அறிமுகப்படுத்துவதாக கடந்து சில நாட்களுக்கு முன் ரஷ்ய அதிபர் புதின் தெரிவித்திருந்தார்.
Sputnik-V என்று அழைக்கப்படும் அம்மருந்தின் செயல்திறன் மற்றும் நம்பகத்தன்மை குறித்து தங்களுக்கு எந்த தகவலும் தெரியாது என்று உலக சுகாதார நிறுவனம் குறிப்பிட்டது.
அதன் ஆய்வு முடிவுகள், பொதுவெளியில் வெளியிடப்படாததால், Sputnik-V இன் நம்பகத்தன்மையை அந்நாட்டு மருத்துவர்களே சந்தேகிக்கின்றனர்.
இதற்கிடையே, கொரோனா வைரஸ் நாளுக்கு நாள் பரிணாம வளர்ச்சி அடைந்து வருகிறது. ஒவ்வொரு மரபணுப் பிறழ்வின் (mutation) போதும், கொரோனாவின் பரவும் வேகம் அதிகரிப்பதாக ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர்.
இந்நிலையில், அரைகுறையான தடுப்பு மருந்துடன் கொரோனாவை எதிர்கொண்டால், வைரஸ் முற்றிலும் அழியாமல், பரிணாம வளர்ச்சி அடைந்து மேலும் சிக்கலை உருவாக்கும். அப்போது, வைரஸின் பரவும் வேகம் மற்றும் வீரியம் அதிகரிக்கும் வாய்ப்புகள் அதிகம் உள்ளன.
முழுமை பெறாத தடுப்பு மருந்தை பயன்படுத்துவதற்கு பதிலாக, மருந்தே பயன்படுத்தாமல் இருப்பது மேலானது என்று விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.
இந்த சூழலில், ரஷ்ய அரசு அந்நாட்டு மக்கள் 40,000 பேருக்கு, Sputnik-V தடுப்பு மருந்தை வழங்க இருப்பதாக அறிவித்திருப்பது, அறிவியலாளர்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தியுள்ளது.